News May 8, 2025
பாக்., அமைதியை விரும்பவில்லை: ராணுவம்

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அபரேஷன் சிந்தூர்-ன் இலக்கு பாக்., ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம். இருப்பினும் பாகிஸ்தான், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதற்றம் அதிகரிக்காத வகையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
News May 8, 2025
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.
News May 8, 2025
சிபிஎஸ்இ 10, 12 தேர்வு: மறுமதிப்பீட்டில் புதிய முறை

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீட்டில் புதிய முறை அமலுக்கு வருகிறது. இதுவரை மதிப்பெண் சரிபார்ப்புக்கு விண்ணப்பித்து, பின் விடைத்தாள் நகலை பெற்று, மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் புதிய முறையில், மாணவர்கள் முதலில் திருத்திய விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதன்பின் மதிப்பெண்கள் சரிபார்ப்பு (அ) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 2024-25-ல் தேர்வு எழுதியோர் இதை பயன்படுத்தலாம்.