News April 26, 2025
சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 26, 2025
நான் சந்தானத்துக்கு அம்மாவா? ஷாக்கான கஸ்தூரி

கஸ்தூரி மேடம்கிட்ட அம்மா கேரக்டர்ல நடிக்கணும்னு கேட்டேன், அவுங்க நான் சந்தானத்துக்கு அம்மாவா?அப்டின்னு ஷாக் ஆனாங்க, பிறகு கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதிச்சாங்க என நடிகர் சந்தானம் கூறியுள்ளார். மே 16-ல் வெளியாகவுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் யாஷிகா ஆனந்த் சந்தானத்தின் தங்கையாக நடித்துள்ளார். டிடி ரிட்டன்ஸ் போல இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 26, 2025
டி.ஜெ., மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

டி.ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக டி.ஜெ., அவரின் ஆதரவாளர்கள் என 40 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
News April 26, 2025
தங்கம் விலை மேலும் சரியும்.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

<<16212631>>தங்கம்<<>> விலை மேலும் சரியக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை 42% உயர்ந்து, 22-ம் தேதி உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 சரிந்தது. நேற்று விலையில் மாற்றமில்லை. USA டாலர் மீதான முதலீடு அதிகரிப்பதும், சீனா-USA வர்த்தக போர் தீவிரம் குறைவதாலும், தங்கம் விலை மேலும் குறையும் எனக் கூறப்படுகிறது.