News October 17, 2025

இந்தியாவிடம் தோற்றதால் பாக்., கேப்டனுக்கு கிடைத்த தண்டனை

image

ஆசிய கோப்பையில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், பாக்., கேப்டன் சல்மான் அலி அகாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க PCB முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷதாப் கானை T20 கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள T20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

Similar News

News October 18, 2025

அதிமுகவை EPS அழித்து வருகிறார்: TTV தினகரன்

image

துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை EPS அழித்து வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக கட்சி என்பது EPS என்ற தனிநபரின் கட்டுபாட்டில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் அமமுக கூட்டணி, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வெற்றி கூட்டணியாகவும் அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

பாத்ரூமுக்கு போனுடன் செல்பவரா நீங்கள்?

image

பாத்ரூமுக்கு போனுடன் போவது உங்கள் கட் (Gut) ஹெல்த்தை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். டாய்லெட்டில் நீண்டநேரம் அமர்ந்து கையில் போனை நோண்டிக் கொண்டிருப்பது குடலுக்கு அதிக அழுத்தத்தை தருவதால் மூலநோய் வரும் ஆபத்து 46% அதிகரிக்கிறதாம். ஆகவே, பாத்ரூமில் போன் பயன்படுத்துவதை குறையுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதுடன், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.

News October 18, 2025

CSK-வில் சஞ்சு சாம்ஸன்? புன்னகைத்த ருதுராஜ்

image

IPL-ல் சஞ்சு சாம்ஸனை டிரேடிங் மூலம் ராஜஸ்தானிடம் இருந்து சென்னை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சஞ்சு சாம்ஸனுடன், ருதுராஜ் சிரித்து மகிழும் போட்டோவுக்கு ❤️ போட்டு SM-ல் பகிர்ந்துள்ளது CSK. இது, சஞ்சு சாம்ஸன் CSK அணிக்கு வருவதற்கான சமிக்ஞை என கூறும் ரசிகர்கள், Welcome சேட்டா என்று கமெண்ட் செய்கின்றனர். முன்னதாக சஞ்சு சாம்ஸனும், அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

error: Content is protected !!