News April 27, 2025

54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக்., ராணுவம்!

image

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் (Waziristan) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Similar News

News April 28, 2025

தங்கம் விலை சரிவு இன்றும் நீடிக்குமா?

image

ஆபரணத் தங்கம் விலை கடந்த 22-ம் தேதி புதிய உச்சம் தாெட்டது. இதையடுத்து 23, 24-ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.2,280 சரிந்தது. அதன்பிறகு 25, 26, 27 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்று (27-ம் தேதி) 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. இன்று இதே விலை நீடிக்குமா? அல்லது மேலும் குறையுமா? இல்லை அதிகரிக்குமா? என்பது காலை 9.30 மணிக்கு தெரிய வரும்.

News April 28, 2025

சைலண்டாக உருவாகும் சீனாவின் கிரிக்கெட் அணி!

image

2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக சீனா தனது கிரிக்கெட் அணியை உருவாக்கி வருவதாக AUS முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வெல்வதையே லட்சியமாகக் கொண்டு அந்த அணி தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், T10-ஐயும் சேர்த்து இனி கிரிக்கெட்டில் 4 ஃபார்மெட்கள் இருக்கும் எனவும் கணித்துள்ளார். கடந்த 2023 ஜூலையில் சீனா முதல்முதலாக டி20-யில் மலேசியாவுடன் விளையாடியது.

News April 28, 2025

6வது முறையாக அமைச்சரவை மாற்றம்.. CM சொல்லும் சேதி!

image

CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக <<16237354>>அதிரடி மாற்றம்<<>> செய்யப்பட்டுள்ளது. மூத்த தலைவரான பொன்முடி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கட்சியில் மற்ற தலைவர்களுக்கான வார்னிங் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள் என CM அறிவுறுத்தியுள்ளார். இதனால், கட்சியில் மேலும், சிலர் மீது சாட்டை சுழற்றப்பட உள்ளதாம். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!