News May 16, 2024
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (1)

காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 15, 2025
அடுத்த பிஹார் CM இவரா?

பிஹாரில் நிதிஷ் தலைமையில் தேர்தலை சந்தித்த NDA கூட்டணி இமாலய வெற்றி கண்டுள்ளது. இதனையடுத்து, பிஹார் CM யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, சாம்ராட் சௌத்ரியின் பெயரை பாஜக உத்தேச பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் தற்போது அங்கு DCM ஆகவும் உள்ளார். ஜேடியுவை(85) விட பாஜக(89) அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அவர்கள் கைகாட்டும் நபரே CM ஆகலாம் என பேசப்படுகிறது.
News November 15, 2025
1,429 பணியிடங்கள்.. நாளையே கடைசி: APPLY

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவுகளோடு +2 தேர்ச்சி. வயது வரம்பு: 18+. சம்பளம்: ₹19,500 – ₹71,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 15, 2025
ராகுல் அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பு: குஷ்பு

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, பிஹாரில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் கடும் சரிவை குறித்து விமர்சித்துள்ள குஷ்பு, ராகுல் அரசியலை விட்டு விலக இது இன்னொரு வாய்ப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், PM மோடி மற்றும் நிதிஷ் குமார் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இது அவர்களின் தலைமைக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.


