News April 23, 2025
பாக். வான்வெளியை தவிர்த்த பிரதமர்

பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு நேற்று பயணம் மேற்கொண்டபோது, பாக். வான்வெளியை பயன்படுத்தி ஓமன் வழியாக சென்றார். ஆனால், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் இன்று அவசர அவசரமாக நாடு திரும்பினார். அப்போது, பாக். வான்வெளியை தவிர்த்துவிட்டு, ஓமன் – குஜராத் வழியாக டெல்லி வந்தடைந்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயண வழித்தடத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Similar News
News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை & தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News April 23, 2025
GBU விவகாரம்.. அப்பா சொன்னது பொய்: பிரேம்ஜி

‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவின் பாட்டால் தான் ஓடியது என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது வைரலானது. ஆனால், அதை மறுத்துள்ள அவரது மகன் பிரேம்ஜி, அனைவருக்குமே உண்மை தெரியும் எனவும், அஜித்தின் படம் அஜித்தால் மட்டுமே ஓடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பது போன்று, எனது அப்பாவும் அவருடைய அண்ணனுக்காக குரல் கொடுத்ததாக பிரேம்ஜி கூறியுள்ளார்.