News March 29, 2025
பாக். கிரிக்கெட் காலி… அடிமேல் அடி!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என மண்ணை கவ்விய பாகிஸ்தான், ODI தொடரையும் தோல்வியுடன் தொடங்கியுள்ளது. முதலில் விளையாடிய நியூசிலாந்து, சாப்மேனின் சதத்துடன் 344 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானின் பாபர்(78), சல்மான் ஆகா(58) அரை சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொதப்ப 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியில் இருந்து பாகிஸ்தான் எழுச்சி பெறுமா?
Similar News
News April 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 01 ▶பங்குனி – 18 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:30 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: அஸ்தம் ▶நட்சத்திரம் : பரணி மா 3.22
News April 1, 2025
எதுக்கு.. பூட்டிய வீட்டில் தேடிக்கிட்டு?

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து காமெடி நிகழ்ச்சி நடத்திய விவகாரத்தில், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், மும்பையில் உள்ள குணால் காம்ரா வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இது குறித்து காம்ரா தனது X பக்கத்தில், நேரத்தை வீணடித்து, 10 ஆண்டுகளாக தான் வசிக்காத வீட்டிற்கு போய் போலீசார் தேடுவதாகவும், இது மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் செயல் எனவும் பதிவிட்டுள்ளார். அவர் தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்.
News April 1, 2025
சீனா சென்று இந்தியாவை வம்பிழுத்த யூனுஸ்

சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், அங்கு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலங்களால் மூடப்பட்டுள்ளதாகவும், எனவே கடல் பரப்பு உள்ள வங்கதேசத்தில் முதலீடுகளை செய்து, சீனா பொருளாதார விரிவாக்கம் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்த பேச்சு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் அமைந்துள்ளது.