News August 21, 2025

எல்லையில் துண்டுச் சீட்டுடன் வந்த பாக். புறா

image

பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறாவால் ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்த போது அதன் காலில் துண்டுச் சீட்டு இருந்தது தெரியவந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் உண்மையான மிரட்டலா ? அல்லது வெற்று மிரட்டலா ? என விசாரணை நடத்தப்படுகிறது.

Similar News

News January 25, 2026

ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்: அதிமுக

image

விஜய்யின் விமர்சனத்திற்கு ‘பனையூர் பண்ணையார்’ என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக சாடியுள்ளது. மேலும், அன்றைய CM (ஜெ.,) வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி விஜய் காத்திருந்ததாகவும், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் (விஜய்) ஒரு காரணம்தானே எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.

News January 25, 2026

பிரபலம் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

image

பத்ம பூஷண் விருது வென்ற மூத்த பத்திரிகையாளர் <<18955198>>மார்க் டல்லி<<>> மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை துறையின் முக்கிய குரலாக ஒலித்த டல்லி மறைவால் வருத்தமுற்று இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவரது படைப்புகளில் பிரதிபலித்ததாக குறிப்பிட்ட மோடி, டல்லியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

image

விடுமுறை நாளான இன்று, மக்களை வெளியே வரவிடாமல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!

error: Content is protected !!