News April 2, 2025

ஊடுருவ முயன்ற பாக்., ராணுவம்.. இந்தியா பதிலடி..

image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 -5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News April 6, 2026

விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

image

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

ICC மார்ச் 2026 சிறந்த வீரர்: போட்டியில் சஞ்சு & பும்ரா!

image

சஞ்சு சாம்சன் & பும்ரா மார்ச் 2026 ICC சிறந்த வீரருக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். T20I WC-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரும் நாமினேட்டாகி உள்ளனர். இவர்களுடன் SA இளம் பேட்ஸ்மேன் கானர் எஸ்டர்ஹுய்சனும் பட்டியலில் உள்ளார். உங்களின் ஃபேவரைட் வீரருக்கு வாக்களிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இந்த விருதுக்கு யார் சரியான ஆள்’னு நினைக்கிறீங்க?

News April 6, 2026

பயிர்க்கடன் தள்ளுபடி.. EPS தேர்தல் வாக்குறுதி

image

அதிமுக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே, கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!