News February 15, 2026
PAK-க்கு எதிராக இந்தியாவின் மாஸ் ரெக்கார்டு!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான T20I WC போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் 8 முறை இத்தொடரில் மோதியுள்ள நிலையில், இதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு தொடரில் மட்டும் ஒரே ஒரு முறை பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. கோப்பையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்திய அணி, இன்று பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டுமா?
Similar News
News April 3, 2026
BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

வேலூர் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மா.செ., ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ் அண்மையில் திமுகவில் இருந்து விலகினார். மாதனூர் ஒன்றியச் சேர்மனான அவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டில் EPS முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். பூங்கொத்து கொடுத்து சுரேஷை வரவேற்ற EPS, வேலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
News April 3, 2026
ஏன் தண்டவாளங்கள் துரு பிடிப்பதே இல்லை தெரியுமா?

மழையில் நனைந்தாலும், ஏன் ரயில் தண்டவாளங்கள் துரு பிடிப்பதில்லை தெரியுமா? ✦சிறப்பு கலவையால் உருவாக்கப்படும் ‘C-Mn ரயில் எஃகு’ தான் தண்டவாளங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், 1% கார்பன், 12% மாங்கனீசு சேர்க்கப்படுகிறது. இது துரு பிடிப்பதை குறைக்கிறது ✦ரயில்கள் ஓடிக் கொண்டே இருப்பதால், தண்டவாள மேற்பரப்பு மெருகேறிக்கொண்டே இருக்கும். இதனால், தண்டவாளத்தின் மேற்பரப்பில் ஈரப்பதம் ஒட்டாது.
News April 3, 2026
விசிகவுக்கு வாக்கு கேட்ட ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகின்றார். இந்நிலையில் வில்லிவாக்கம் முழுவதும் நடந்துச் சென்று வீடுவீடாக அவர் ஓட்டு கேட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து கொண்டே வாக்கு கேட்ட அவர், வாய்தவறி விசிகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என கூறினார். தவெகவில் இணைவதற்கு முன், ஆதவ் விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


