News April 18, 2025
10 முக்கிய கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து

தமிழகத்தில் 10 முக்கிய கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெளர்ணமி தோறும் திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் குவிந்து வருவதால், அந்நாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அமைச்சர் சேகர்பாபு இதனை அறிவித்தார். திருவிழாக்களின் போது பழநி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News September 8, 2025
நாளை வெளியாகப் போகும் ஆப்பிள் ரகசியம்

ஆப்பிள் நிறுவனம் நாளை தன் அசத்தலான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. கலிபோர்னியாவில் நடைபெறும் லாஞ்ச் நிகழ்வில் ஐபோன் 17 சீரீஸ் போன்கள் அறிமுகமாக உள்ளது. இதுதவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் SE, ஏர்பாட்ஸ் Pro 3 உள்ளிட்ட தயாரிப்புகளும் அறிமுகமாக உள்ளன. இவற்றின் புதிய அம்சங்கள் குறித்த விஷயங்கள் ரகசியமாகவே உள்ளன. நாளை வரை காத்திருங்கள்.
News September 8, 2025
வெளிநாட்டு பயணம் படுதோல்வி: அன்புமணி

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்திருப்பதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டதில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் 89% (₹13,815) விரிவாக்கத் திட்டங்களுக்கானவை என்றும், இதனை வெளிநாடு செல்லாமல் தமிழ்நாட்டில் இருந்தே செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 8, 2025
பட்டா வகைகள் எத்தனை தெரியுமா?

நாம் உபயோகப்படுத்தும் பட்டாவில் பல வகைகள் உள்ளன. 1.யுடிஆர் பட்டா(UDR Patta). 2.தோராய பட்டா(Provisional Patta) 3.AD கண்டிஷன் பட்டா. 4. நில ஒப்படை பட்டா(விவசாயம் (அ) மனை). 5.கூட்டுப் பட்டா(Joint Patta). இப்படிப் பல வகை பட்டாக்கள் உள்ளன. மேலே இருக்கும் படங்களை SWIPE செய்து பட்டா வகைகளின் விவரங்களை அறியலாம். SHARE IT.