News April 24, 2025
பஹல்காம் விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை, காங்கிரஸ் இதில் அரசியல் செய்யாது, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து சக்தியையும் மோடி அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 24, 2025
கை கோர்க்கும் ஹமாஸ், பாக். தீவிரவாதிகள் (1/2)

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது போன்ற பாக். தீவிரவாத அமைப்புகள், காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், ஹமாஸ், பாக். தீவிரவாதிகள் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஹமாஸ் போராட்டமும், காஷ்மீர் தீவிரவாதமும் ஒன்று என சித்திரிக்கும் வேலை நடப்பதாகவும் கூறியுள்ளன.
News April 24, 2025
கை கோர்க்கும் ஹமாஸ், பாக். தீவிரவாதிகள் (2/2)

பாக். ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஜெய்ஸ் இ முகமது தலைமையகத்துக்கு ஹமாஸ் குழு வந்ததாகவும், காஷ்மீர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் ஹமாஸ் குழு கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு அக்குழுவினர் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிதாக எழும் இந்த சவாலை கவனிக்குமா இந்தியா?
News April 24, 2025
கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் கொலை மிரட்டல்

‘I kill you’ என இ-மெயில் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் இந்த கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக டெல்லி போலீஸில் கம்பீர் புகாரளித்துள்ளார். முன்னதாக, ‘இதற்கு பொறுப்பானவர்கள் விலை கொடுப்பார்கள். இந்தியா தாக்கும்’ என பஹல்காம் தாக்குதலுக்கு கம்பீர் கண்டனம் தெரிவித்திருந்தார்.