News April 27, 2025
பஹல்காம் இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் ஆவேசம்!

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News April 28, 2025
ராசி பலன்கள் (28.04.2025)

➤மேஷம் – துன்பம் ➤ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – பெருமை ➤ சிம்மம் – பயம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – பரிசு ➤ தனுசு – உயர்வு ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – ஆதாயம் ➤ மீனம் – லாபம்
News April 28, 2025
பெற்றோர் விவாகரத்து: மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
News April 27, 2025
விஜய்யை வடிவேலு உடன் ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி

விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் போல இல்லை; பொதுக்கூட்டம் போல உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், 2011-ல் வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.