News May 8, 2025

பஹல்காம் தாக்குதல் தான் தொடக்கப்புள்ளி: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Similar News

News December 1, 2025

வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் நன்மைகள்

image

மழை மற்றும் குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். இது தினசரி ஆரோக்கிய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News December 1, 2025

RO-KO ஜோடியை நினைத்து கவலை வேண்டாம்: பதான்

image

RO-KO ஜோடியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். இந்த 2 லெஜெண்ட்களும் தங்களது கடைசி கட்ட கிரிக்கெட் கரியரை சுதந்திரமாக விளையாடட்டும், ரசிகர்களாகிய நாம் அதை ரசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI WC-க்கு இருவரும் தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

போன்களில் வரும் மாற்றம்.. இனி தொலைந்தாலும் NO Worry!

image

இந்தியாவில் ஒவ்வொரு புதிய போன்களிலும், ‘Sanchar Saathi’ எனும் டெலிட் செய்ய முடியாத சைபர் செக்யூரிட்டி செயலியை, 90 நாள்களுக்குள் Inbuild செய்ய சொல்லி, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள போன்களில், சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இதை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு செயலியின் உதவியால், இதுவரை காணாமல் போன 7 லட்சம் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!