News April 28, 2025

பஹல்காம் தாக்குதல் செய்தி.. சர்ச்சையில் சிக்கிய பிபிசி

image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகள் சர்ச்சையானது. “காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசாக்களை PAK நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது இந்தியா மீது தவறு என்பது போல் உள்ளதாக பலர் விமர்சித்தனர். இதேபோல் தீவிரவாதிகள் என்பதற்கு பதில் போராளிகள் என்று குறிப்பிட்டதை கண்டித்தும் மத்திய அரசு பிபிசி-க்கு கடிதம் எழுதியுள்ளது.

Similar News

News April 28, 2025

இபிஎஸ்-க்கு அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

image

அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக கூட்டணி வைத்த இபிஎஸ்ஸின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் கூறிய அவர், இபிஎஸ் ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும், தோல்வியில் சாதனை படைக்கும் ‘தோல்விசாமி’, அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News April 28, 2025

மூன்று நாள்கள் போர் நிறுத்தம்

image

உக்ரைன் மீதான போர் 3 நாள்கள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். மே 8 முதல் மே 10 வரை போர்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மே 9-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதால், புடின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும், இந்த போர்நிறுத்தம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 28, 2025

பொள்ளாச்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு

image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.

error: Content is protected !!