India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க, நாதக சார்பில் தண்ணீர் மாநாடு நடத்தப்பட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். ஆடு, மாடுகள் மாநாடு, கடல் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகள் மாநாடு என புதுவிதமான மாநாடுகளை சீமான் முன்னெடுத்தார். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு, நீர்வள பிரச்னைகள் குறித்து விவாதிக்க நவ.15-ல் தண்ணீர் மாநாடு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை CM ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, அடையாறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் CM இன்று மீண்டும் ஆய்வு செய்தார். கடந்த அக்.24-ம் தேதியும் இங்கு ஆய்வு செய்திருந்த நிலையில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரி நீர் அடையாறு வழியாக தான் சென்று கடலில் கலக்கிறது.

அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரின் பைசன் படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சினிமாவில் தனது 10 ஆண்டுகால பயணத்தை பற்றி நினைவுகூர்ந்த அனுபமா, தனது கரியரின் தொடக்கத்தில் சோசியல் மீடியாக்களில்(SM) சந்தித்த ட்ரோல்கள் பற்றி பேசினார். அவை தன்னை உணர்ச்சி ரீதியாக ஆழமாக பாதித்ததாக குறிப்பிட்டார்.

தீபாவளிக்கு முன்பு வேகமாக உயர்ந்த தங்கம் பின்னர் மளமளவென குறைந்தது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னரே, சர்வதேச அளவில் நிகழும் வர்த்தக மாற்றங்களே என்பது புலம்பட ஆரம்பித்தது. கடந்த 17-ம் தேதி புதிய உச்சம்(₹97,600) தொட்ட தங்கம் அதன் பின்னர் ₹5,600 குறைந்து ₹92,000 ஆக உள்ளது. விலை சரிவு ஏன் என வல்லுநர்கள் கூறிய காரணங்களை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

◆தேவை: ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ◆செய்முறை: 2 கப் தண்ணீரில் ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ஆகியவற்றை சேர்த்து 2-5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன், அதனை வடிகட்டி குடிக்கலாம். இதனை வாரத்துக்கு 2 முறை பருகினால் சுவாச மண்டல நோய் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால், வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள், மாணவர்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..

நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச்சென்ற ஜீப் ஒன்று 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக்.27) விடுமுறையாகும். ஏற்கெனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27 அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் ஜெயிலர் 2-வின் கதை Synopsis ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வர்மனை கொன்ற பிறகு, மேலும் சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி தேடி முத்துவேல் பாண்டியன் எப்படி வேட்டையாடுகிறார் என்பதே ஜெயிலர் 2 என்கின்றனர். முதல் பார்ட்டை விடவும் இதில் Violence அதிகமாக இருந்த போதிலும், ரஜினி ‘அதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம், படம் நல்லா வந்தா போதும்’ என கூறிவிட்டாராம்.

சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எனவே, தமாகாவினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணியை செய்து, தமாகாவுக்கு உரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.