India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2022 இல் உலகளவில் 105 கோடி மெட்ரிக் டன் (19%) உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக ஐ.நா சபை (சுற்றுச்சூழல் பிரிவு) தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், “உலகம் முழுவதும் 78 கோடி பேர் நாள்பட்ட பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவை வீணாக்குவதில் வீடுகள் 60% பங்கு வகிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.

*1868 – ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த நாள். *1930 – கொன்ஸ்டன்டீனபில் இஸ்தான்புல் எனப் பெயர் மாற்றம் பெற்றது. *1737 – பாஜிராவ் படை முகலாயர்களை டெல்லிப் போரில் தோற்கடித்தது. *1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது. *1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. *2006 – தமிழக மெய்யியலாளர் வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில், “2013-2024 வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் ₹2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 6,659 மோசடிகள் இடம்பெற்றுள்ளன”எனக் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ இணை இயக்குநர் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுப்ரியா 2025ஆம் ஆண்டு வரை சிபிஐ இணை இயக்குநராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரியாவின் பதவி காலம் ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: கற்பியல்
▶ அதிகாரம்: ஊடலுவகை ▶ குறள் எண்: 1323
▶குறள்:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
▶ பொருள்:
நிலத்தோடு மழைநீர் கலந்த பேரழகான காட்சியைப் போல பேரன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதால் வரும் இன்பத்தைவிட தேவருலகிலும் வேறொரு இன்பம் இருக்க வாய்ப்பில்லை.

சாகாவரம் பெற்றதுதான் கலை; அதற்கு ‘குணா’ படத்தை உதாரணமாக சொல்லலாம் என்று நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் பெருமிதமாக கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை மும்பையில் பார்த்தேன். அப்போது அங்கு வந்திருந்த நிறைய தமிழ் மக்கள் என்கிட்ட வந்து, ‘குணா’ படத்தை பற்றி பேசினார்கள். காலம் கடந்தும் குணாவை கொண்டாடுவது ஆச்சர்யத்தை அளிக்கிறது” எனக் கூறினார்.

கோவையில் முதலில் அனைத்து பூத்களிலும் பாஜக ஏஜென்ட்களை நியமிக்கட்டும்; பிறகு வெல்வதைப் பற்றி பேசலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி கூறியுள்ளார். பாஜக வளர்ச்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “பேஸ்புக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது பாஜக. களத்தில் இல்லாத பாஜக, அதிமுகவுக்கு போட்டியா? தேர்தல் களத்தில் பிற வேட்பாளர்கள் எங்களுக்கு தூசுக்கு சமானம்” என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் MI – SRH அணிகள் இடையிலான 8ஆவது லீக் போட்டியானது பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் சாதனை பட்டியலில் முதலிடம் (523 ரன்கள்). 2.அதிக சிக்சர்கள் (38 சிக்சர்கள்) அடிக்கப்பட்ட ஆட்டங்களில் முதலிடம் . 3. அதிக பவுண்டரிகள் (69 பவுண்டரிகள்) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம்.

இன்று (மார்ச் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

உலகளவில் வலிமையான காப்பீடு பிராண்டாக எல்.ஐ.சி., இருப்பதாக Brand Finance Insurance 2024 அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில், “எல்.ஐ.சி., நிறுவனமானது, AAA வலிமை மதிப்பீட்டுடன் ஏறத்தாழ ரூ.81,340 கோடி பிராண்டு மதிப்புடன் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தாய்வானின் கதே லைப் இன்ஷூரன்ஸ், ஆஸ்திரேலியாவின் என்.ஆர்.எம்.ஏ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முறையே 2 & 3ஆவது இடங்களில் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.