News October 25, 2025

பூனைகள் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

image

மனிதர்களுடன் செல்லம் கொஞ்சும் பிராணிகளில் ஒன்று பூனை. மனிதர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் ஒரு செல்லப்பிராணி. நம் வாழ்வின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளும், அமைதியான ஆறுதலை தரும் உயிர் துணைகள். இப்படிப்பட்ட பூனைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில ஆச்சர்யமூட்டும் விஷயங்களை அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…

News October 25, 2025

Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

image

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ✱போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ✱அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ✱அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.

News October 25, 2025

காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

image

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.

News October 25, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. நிறைவேறாத கடைசி ஆசை

image

நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகன் <<18081336>>பூபதியின்<<>> மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000 படங்களில் தனது அசாத்திய நடிப்பால் பெரும் புகழ்பெற்ற மனோரமா, தான் எவ்வளவு முயன்றும் தனது சொந்த மகனை சினிமாவில் ஜொலிக்க வைக்க முடியவில்லை. பூபதி, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதனால், மனோரமாவின் கடைசி ஆசையும் மண்ணில் புதைந்துவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 25, 2025

BREAKING: இந்தியா பவுலிங்

image

சிட்னியில் நடக்கும் 3-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ராணா, குல்தீப், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?

News October 25, 2025

Ola, Uber-க்கு செக்.. விரைவில் வரும் ‘பாரத் டாக்ஸி’

image

Ola, Uber போல மத்திய அரசின் ‘பாரத் டாக்ஸி’ டிசம்பர் மாதம் நாட்டில் அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக டெல்லியில் இந்த சேவை 650 டாக்ஸிகளுடன் தொடங்கப்பட்டு, பிறகு 2026-ல் 20 நகரங்களுக்கு விரிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிக கட்டணத்துக்காக Ola, Uber போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பாரத் டாக்ஸி நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.

News October 25, 2025

மூக்குத்தி அம்மன்-2, எனக்கு சம்பந்தம் இல்லை: RJ பாலாஜி

image

RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரவேற்பை பெற்ற படம் மூக்குத்தி அம்மன்-1. ஆனால் இப்போது, இந்த படத்தின் 2-ம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதிலும் நயன்தாரா தான் நடிக்கிறார். இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் -2’ படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று RJ பாலாஜி தெரிவித்துள்ளார். ‘கருப்பு’ படத்தின் 75% பணிகள் முடிந்து விட்டதாக கூறிய அவர், படம் விரைவில் ரிலீசாகும் என்று குறிப்பிட்டார்.

News October 25, 2025

GALLERY: உலகின் மிக அழகிய வண்ணமயமான பறவைகள்!

image

அழகின் மகிழ்ச்சியை கொண்டாட, உலகின் மிகவும் அழகான வண்ணமயமான பறவைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த லிஸ்ட்டில் இன்னும் என்ன பறவைகளை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?

News October 25, 2025

ஆசியக் கபடிப் போட்டியில் அசத்திய தமிழக வீரர்!

image

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று மன்னார்குடியை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸ் அசத்தியுள்ளார். அவருக்கு அமைச்சர் TRB ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், ‘ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற எங்கள் மின்னும் மன்னை வடுவூர் வீரர் அபினேஷ் மோகன்தாஸ்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்..!

News October 25, 2025

பாஜக அபார வெற்றி

image

ஜம்மு காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளர் சத் பால் சர்மா சர்ப்ரைஸாக அபார வெற்றி பெற்றுள்ளார். அதுவும், சட்டமன்றத்தில் பாஜகவிற்கு இருக்கும் பலத்தை விட 4 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். NC வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். வாக்களித்தது ஆளும் கட்சியினரா, மாற்றுக்கட்சி MLAக்களா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

error: Content is protected !!