India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ, அந்த தொகுதிகளில் மீண்டும் அவர்களை சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினர் கடைசி நேரத்தில் நீக்கி உள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலை, எல்.முருகன் போட்டியிடும் தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உ.பி.,யில் INDIA கூட்டணியின் வெற்றியை தடுக்கவும், வாக்குகளை சிதறடிக்கவும் கச்சிதமாக காய்களை நகர்த்திய மாயாவதி, பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள 64 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 18 இஸ்லாமியர், 14 ஓபிசி, 10 பிராமணர் இடம்பெற்றுள்ளனர். INDIA கூட்டணி மிகவும் நம்பக் கூடிய தலித், ஓபிசி, இஸ்லாமிய வாக்குகளை அவர் பிரித்து விடுவாராம்.

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 கிரிமினல் வழக்குகளில் கடந்த ஒரே ஆண்டில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜன. 1 நிலவரப்படி 4,697 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில், 2,018 வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனினும் புதிதாக 1,746 வழக்குகள் பதிவானதால், நிலுவை வழக்குகள் 4,472ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பே விரைந்து தீர்ப்பளிக்க காரணமாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் கட்சி புகாரைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் வரும் மே 18ஆம் தேதி வரை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மே 27ஆம் தேதி தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.

காலையில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைக் எடுத்துக்கொள்வது அவசியம். வைட்டமின் சி சத்து வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனைத் தரக்கூடியது. உடைக்காத முழுத் தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6.30 மணி அளவில் நடைபெறுகிறது. மாசி வீதிகளில் தேரை வடம்பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர் சேவை நடைபெறுகிறது.

▶ஏப்ரல் – 22 | ▶ சித்திரை – 09 ▶கிழமை: திங்கள் | ▶திதி: சதுர்த்தசி ▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை ▶எமகண்டம்: 10:30 – 12:00 வரை ▶குளிகை: 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல், 18% அதிகரித்து ரூ.19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில், இதன் மதிப்பீடு 19 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. இதே போன்று, மறைமுக வரி வசூலும் ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இது மதிப்பீட்டை விட மிகவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள இயலும். மூத்த குடிமக்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தவும் ஐ.ஆர்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.