India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம் என்று அன்புமணி கடுமையாக சாடியிருக்கிறார். CM ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரா என்று கேள்வி எழுப்பிய அவர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், அடக்குமுறையை ஏவிய திமுக அரசை, தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரித்தார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2.513 உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு & D.Cop., வயது வரம்பு: 18 – 32. விண்ணப்பக் கட்டணம்: ₹500. ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.29. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம், அது மனித இயல்பு என வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் சுயநலமாக சிந்தித்ததில்லை, மக்களுக்காக குரல் கொடுக்கும் நானே ரியல் பெரியாரிஸ்ட் என பெருமிதம் தெரிவித்தார். தனது தாயார், தம்பி, மகன் என மக்களுக்காக சேவை செய்யும் தனது குடும்பம் தியாக குடும்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கூலி’ பட ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு தான் லதா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்துள்ளார். மனைவியை விட்டு பிரிந்த தனுஷ், தனது தலைவரை தரிசிப்பதை விடமாட்டார் என அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். லோகேஷ், அனிருத், ஸ்ருதி ஆகியோர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கின்றனர்.
BJP அரசு, ECI உடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், 2021 தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை என அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவற்றில் 9,133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. CTS முறையில் பணமாக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில், அக்.4 முதல் 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்ற RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing மற்றும் Settlement on Realisation முறையில் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். இதனால் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.
சுதந்திர தினத்தன்று CM ஸ்டாலின் கொடி ஏற்றும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து உடனடியாக தீவிர விசாரணை செய்த போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகள் செல்ல உள்ளதால் அது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.