News October 19, 2025

BREAKING: 11 பேர் அதிரடி நீக்கம்

image

அண்ணா பல்கலை.,யில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நேற்று அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இவர்கள் 11 பேரும் பேராசிரியர்களாக தொடர்வார்கள் எனவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக உயர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News October 19, 2025

கார் விபத்தில் சிக்கினார் Ex CM

image

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உத்தராகண்ட் Ex CM ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியது. நேற்று (அக்.18) இரவு 7.30 மணிக்கு ஹரிஷின் கார் கரோலி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் குறுக்கே அடையாளம் தெரியாத நபர் ஒரு வந்துள்ளார். இதனால் Sudden Brake அடிக்க, கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இவ்விபத்தில் இருந்து ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்

News October 19, 2025

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால்.. திருமா

image

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது விசிகதான் எனக் கூறினார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விசிக முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதுபோல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.

News October 19, 2025

தீபாவளி ஸ்பெஷல்: அவல் கேசரி செய்வது எப்படி?

image

*தேவையானவை: அவல்- 2 கிண்ணம், நாட்டு சர்க்கரை- 1 கிண்ணம், நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி *செய்முறை: அவல், முந்திரியை 2 தேக்கரண்டி நெய்விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் அவல் கேசரி ரெடி. SHARE IT.

News October 19, 2025

பிரபலம் காலமானார்! கண்ணீர் அஞ்சலி

image

நோபல் பரிசு வென்ற உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் சென் நிங் யாங்(103) காலமானார். சீனாவை சேர்ந்த இவர், தனது Particle physics ஆய்வுக்காக 1957-ல் நோபல் பரிசை வென்றிருந்தார். 1964-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதிலும், சீன கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றால், 2015-ல் அதனை துறந்து மீண்டும் சீனாவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மரணம் இயற்பியல் துறைக்கு பெரிய இழப்பு என விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 19, 2025

விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM

image

தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News October 19, 2025

சோகத்தில் ஆழ்த்திய Ro- Ko!

image

ஆஸி., எதிரான முதல் ODI-ல் இந்திய அணி 21/2 என தள்ளாடி வருகிறது. ரோஹித் 8 ரன்களிலும், கோலி ரன் இன்றியும் அவுட்டானது ரசிகர்களை பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் Ro- Ko பெரிதாக சாதிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், அனைத்தும் சொதப்பி விட்டது. கில் 9* ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் 2* ரன்னிலும் களத்தில் உள்ளனர். மீளுமா இந்தியா?

News October 19, 2025

தங்கம் விலை மளமளவென குறைந்தது.. காரணம் என்ன?

image

தங்கம் விலை கடந்த 17-ம் தேதியுடன்( ₹97,600) ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து ₹96,000-க்கு இன்று(அக்.19) விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததே நேற்றைய விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், தீபாவளியான நாளை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் செய்யாதீங்க

image

நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. *பட்டாசுகளை வாயில் வைத்தோ (அ) கையில் வைத்தோ வெடிக்கக்கூடாது. *மின்கம்பங்கள் அருகே வெடிக்க வேண்டாம். *வாகனத்திற்கு மேல் (அ) உள்புறம் வைத்து வெடிப்பது ஆபத்து. *பட்டாசு வெடிக்கும்போது அருகே சானிடைசர் வைத்திருக்க வேண்டாம். *தீப்பெட்டிக்கு பதிலாக அகர்பத்தி, மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.

News October 19, 2025

ஏமாற்றிய ரோஹித்!

image

14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ரென்ஷாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 13/1 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

error: Content is protected !!