News October 25, 2025

சிட்னி கிரவுண்டும்.. Hitman ரெக்கார்டும்!

image

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?

News October 25, 2025

நோயில்லா வாழ்க்கை வாழ…

image

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.

News October 25, 2025

BREAKING: இடத்தை மாற்றினார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய்க்கு இதுவரை யாரும் இடம் தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக செய்தி வெளியானது. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார்.

News October 25, 2025

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ODI போட்டிகளிலும் தோற்று, இந்தியா தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று சிட்னியில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணம். முக்கியமாக விராட்டின் பார்ம் அவுட் அணிக்கு பின்னடைவாக மாறியது. இன்றைய போட்டியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

News October 25, 2025

எடுத்த காரியத்தில் வெற்றி பெற..

image

சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ ஆஞ்சநேய
கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே. அர்த்தம்:
‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம். SHARE IT.

News October 25, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைகிறார்

image

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பின்னர், ராமதாஸையும் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, ‘மாம்பழம்’ சின்னமும் அன்புமணியின் வசம் வந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அவர் பட்டியலிட்டு லிஸ்ட்டையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News October 25, 2025

ஜான்வி கபூருக்கு திருமணமா?

image

ஜான்வி கபூர் போட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டேட்டஸ் அவருக்கு கல்யாணமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியது. ‘Save the date 29th Oct’ என்ற பதிவுதான் ரசிகர்களை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளது. ஆனால் இப்போது ஜான்விக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை, இது நிச்சயம் படத்தின் ப்ரோமோஷனாகதான் இருக்கும் என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் 29-ம் தேதி உண்மை தெரிந்துவிடும்.

News October 25, 2025

பயிர் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம்: அமைச்சர்

image

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். திமுக அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் EPS பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News October 25, 2025

இதை செய்தால் சேவல் சண்டைக்கு அனுமதி: HC

image

சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை HC, மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டை நிகழ்வுகளை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்வதாக கூறினார். அதேசமயம், ஜல்லிக்கட்டு போன்று சேவல் சண்டை நடத்துவதற்கு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், அதற்கும் அனுமதி அளிக்கலாம் எனக் கூறிய நீதிபதி G.R.விஸ்வநாதன் மனுவை தள்ளுபடி செய்தார்.

News October 25, 2025

அன்புமணி தரப்பு என ஒன்று இல்லை: ராமதாஸ்

image

இரு பிரிவுகளாக உள்ள பாமக இணைவதற்கான எந்த சாத்திய கூறுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே பாமகவில் அன்புமணி தரப்பு என்று ஒன்று இல்லை என்றும், அது ஒரு கும்பல் மட்டுமே எனவும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சின்னம் எங்களுக்குதான் என சொல்பவர்களின் முகம் விரையில் தொங்கிவிடும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!