India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்தது. இந்நிலையில், இரவு 10 மணி வரை, கோவை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தமும் வலுப்பெற்றுள்ளதால், வெளியே செல்லும் போது கவனம் தேவை நண்பர்களே!
பாகிஸ்தான் ராணுவத்தில் ‘ஏவுகணை படைப்பிரிவு’ என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க உள்ளதாக அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் பெரும்பாலான ஏவுகணைகள், டிரோன்களை இந்தியா இடைமறித்து அழித்த நிலையில், அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். சீனாவும் இதே போன்றதொரு படைப்பிரிவை (PLARF) கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் புதிய முயற்சிக்கு அந்நாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாள்கள் தொடர் விடுமுறையால் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிலையில், ஆம்னி பஸ்களில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,700, மதுரைக்கு ₹3,800, நெல்லைக்கு ₹4,000, தூத்துக்குடிக்கு ₹3,500, கோவைக்கு ₹3,700 என தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 26280445 எண்களில் புகார் அளிக்கலாம் என TN அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலையை பரிசீலிப்பதில் ஏன் தாமதம் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும், ஆனால் 1 மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஏமாற்றுவேலை என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
79-வது சுதந்திர தினத்தையொட்டி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் கேப்டன்கள் ரன்ஜீத் சிங் சித்து, மணீஷ், அனிமேஷ் பட்னி, குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சர்தக், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஆர்ஷ்வீர் சிங் தாகூர் ஆகியோர் இவ்விருதை பெறவுள்ளனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்கு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், நாட்டின் பிரிவினையின் போது ஏற்பட்ட கொடூரங்களை ஒருபோதும் மறக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நல்ல நிர்வாகத்தை அடைய நாடு நெடிய தூரம் பயணித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1, 2-ம் தேதிகளில் நடைபெற இருந்த TET தேர்வு தேதியை மாற்றம் செய்து TN ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 15, 16-ம் தேதிகளில் தேர்வுகளை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கல்லறைத் திருநாளன்று தேர்வு நடைபெற இருப்பதால் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவைகள் முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?
பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது ’கூலி’. படத்திற்கு கலவையான ரிவ்யூக்கள் வருவதால் இதனை ஓடிடி-யில் பார்த்துக்கொள்ளலாம் என சில சினிமா பிரியர்கள் கருதுகின்றனர். ₹120 கோடி கொடுத்து அமேசான் ப்ரைம் வாங்கியுள்ள இப்படம் செப்., 3வது வாரத்தில் அல்லது அக்., முதல் வாரத்தில் OTT-ல் வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது.’கூலி’ படத்தை எதுல பார்க்க போறீங்க?
உ.பி. CM யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியதற்காக, MLA பூஜாவை கட்சியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது. ரவுடிகளுக்கு எதிராக யோகி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், தனது கணவரை கொன்ற தாதா ஆதிக் அகமதை புதைத்து தனக்கு நீதி கிடைக்க செய்ததாகவும் பூஜா கூறியிருந்தார். கடந்த 2005-ல், திருமணமான சிறிது நாள்களிலேயே பூஜாவின் கணவர் ராஜு சுட்டுக் கொல்லப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.