India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர் லிங்கம், தனது குடும்பத்தினருடன் மே 23ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மணிவண்ணன், முருகன் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கந்துவட்டி தடை விதிப்புச் சட்டம், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அக்கட்சி தலைவர் கார்கே அறிவித்துள்ளார். மக்கள் முடிவுகளை அறிந்த பிறகு, ஜூன் 4ஆம் தேதி காங்கிரஸ், தனது கருத்தை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார். நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. 6.30 முதல் கருத்துக்கணிப்பு முடிவுகள், நாடு முழுவதும் வெளியாக உள்ளன.

தேர்தல் சமயத்தில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை மக்களிடம் கேட்டறியலாம். பிந்தைய கருத்துக்கணிப்பில், யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விவரம் பெறப்படும். ஒப்பீட்டளவில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுடன் ஒத்துப்போகாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மேல், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் உடனுக்குடன், துல்லியமாகவும், விரைவாகவும் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழக இளநிலை பட்டப் படிப்புகளில் (உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்) சேர, வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் <

டி20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை சதமடித்த ஒரே வீரராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உள்ளார். 20 ஒவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 11 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக நியூசிலாந்தின் மெக்கல்லம், 2012இல் வங்க தேசத்திற்கு எதிராக 123 ரன்களை எடுத்தார். 2ஆம் இடத்தில் 117 ரன்களுடன் கெய்ல் உள்ளார். இந்தியா சார்பாக ரெய்னா மட்டுமே இதுவரை சதம் (101 ரன்கள்) அடித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, முதலில் தபால் வாக்குகளை எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும், திமுக கோரியுள்ளது. தபால் வாக்குகளை முழுமையாக எண்ணி முடிக்க 2 முதல் 3 மணி நேரமாக வாய்ப்புள்ளது.

ஜார்கண்ட்டில் உள்ள பத்ரிநாத் கோவிலில், நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்தார். ‘கூலி’ படப்பிடிப்பிற்கு முன்பு ஆன்மீக பயணமாக ஒரு வாரம் இமயமலை சென்றுள்ள அவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார். நேற்று, டேராடூனில் உள்ள புனித ஸ்தலத்திற்கு சென்ற அவர், இன்று விஷ்ணு கோயிலில் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் செல்ல உள்ளார்.

வெயில் காரணமாக நாடு முழுவதும் இதுவரை, 54 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில், 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஹூட் ஸ்ட்ரோக் போன்ற, பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டாகிறது. எனவே, பகலில் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.