News August 15, 2025

பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

image

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

image

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.

News August 15, 2025

CM ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு: திருமாவளவன்

image

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News August 15, 2025

சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

image

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
* வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.

News August 15, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் நடிகை கைது

image

கேரளாவை சேர்ந்தவர் நடிகை மினு முனிர். இவர் தமிழிலும் சொற்பமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விடுதியில் 4 பேரை அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரில் தற்போது அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.

News August 15, 2025

தொடர் தோல்வியால் அதிரடி மாற்றத்தில் இறங்கிய LSG

image

IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.

News August 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

News August 15, 2025

இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

image

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 15, 2025

இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

image

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.

News August 15, 2025

ஆக.19-ம் தேதி இந்திய அணி அறிவிப்பு

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அணித் தேர்வு கூட்டம் முடிந்தபின், அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமான அணி விவரம்: அபிஷேக், சாம்சன், சூர்யா, திலக், ஹர்திக், கில், துபே, அக்சர், சுந்தர், வருண், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் / பிரசித், ஜிதேஷ்/ஜுரெல் ஆகியோர். உங்கள் கணிப்பு யார் யார்?

error: Content is protected !!