India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேரளாவில் தாமரை மலர வேண்டுமென்பது தான் எனது ஆசை என நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா தெரிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மேனகா வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ‘புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

➤ 1667 – ஜான் மில்டன் தான் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார். ➤ 1981 – PARC முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது. ➤ 1986 – செர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ➤ 1994 – தென்னாபிரிக்காவில் முதல்முறையாக கறுப்பினத்தவர் வாக்களித்தனர் ➤ 2005 – ஏர்பஸ் ஏ380 வானூர்தியின் முதல் சோதனை நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் க்ருணால் பாண்டியா – பன்குரி தம்பதிக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் கபீர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஏப்.21ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு, ‘வயு க்ருணால் பாண்டியா’ என பெயரிட்டுள்ளனர். மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை க்ருணால் பாண்டியா தனது இன்ஸ்டாவில் பகிர வாழ்த்துகள் குவிகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பொதுப்பணிக்கு திரும்ப இருப்பதாக பிரிட்டன் அரச குடும்பம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மன்னர் சார்லஸின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில், இத்தகவலை பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜஹீராபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த பிரசார பேரணியில் பேசிய அவர், ‘அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை மாற்றுவதுடன், இடஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திற்காக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற வைக்குமாறு பாஜக கேட்கிறது’ என விமர்சித்துள்ளார்.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான் சிறப்பு ▶குறள் எண்: 14
▶குறள்: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
▶பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் பி.எஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றாவது முறையாக பி.எஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமான நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன எனவும், ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திரைத்துறையில் போராட்டமும், உழைப்பும் மட்டுமே என்றும் நிலையானது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும், ‘என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை, நிறைய கஷ்டங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது. திரைத்துறையில் நல்ல நிலையை அடைந்த பின்பும், அதைத் தக்கை வைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது’ என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை 18.3 ஓவரிலேயே எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ஜோனி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், மற்றொரு வீரர் சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.

இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.