News April 30, 2024

‘கில்லி’யை கொண்டாடுபவர்கள் இதை ஏன் செய்யவில்லை?

image

20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘கில்லி’ படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில், கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கில்லி பட நடிகர் தாமு. கில்லி படத்தை கொண்டாடும் நீங்கள், 20 ஆண்டுகளாக மரம் நட்டுச் சமூக சேவை செய்வோரை எப்போதாவது கொண்டாடியுள்ளீர்களா? என விரக்தியாகக் கூறியுள்ளார். தாமு பல ஆண்டுகளாக மரம் நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

ஹர்திக் பாண்டியாவை முந்தும் ரிஷப் பண்ட்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடக்கவுள்ள இத்தொடரில், துணை கேப்டன் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அவரை விட சிறப்பாக செயல்பட்டுவரும் ரிஷப், அந்த ரேஸில் தற்போது முன்னிலையில் உள்ளார்.

News April 30, 2024

தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழவேந்தன்

image

இலங்கை முன்னாள் எம்.பி ஈழவேந்தன் (91) வயது மூப்பால் கனடாவில் இன்று காலமானார். இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஈழவேந்தன், பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவர். 1990களில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்னையை புரிய வைக்க, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தார். 2000ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ்நாட்டில் இருந்து ஈழவேந்தனை கனடாவுக்கு நாடு கடத்தியது.

News April 30, 2024

ஈழத் தமிழர்கள் ஆதரவாளர் ஈழவேந்தன் காலமானார்

image

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் MP-யும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடைசி வரை குரல் கொடுத்தவருமான ‘தோழர் ஈழவேந்தன்’ கனடாவில் நேற்று காலமானார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அவர், வயது மூப்பு காரணமாக காலமானார். ஈழவேந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 30, 2024

அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு!

image

தேசிய அளவிலான 67 செய்தித்தாள்களில் பொதுமன்னிப்புக் கோரி தந்த விளம்பரங்களின் விவரத்தை ஏன் முழுமையாக தாக்கல் செய்யவில்லை என்று பதஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாபா ராம்தேவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இணையத்தில் பதிவேற்றம் செய்தது சரியல்ல; அதனை ஏற்க முடியாது எனக் கூறினர்.

News April 30, 2024

டி20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

image

மார்க்ரம் தலைமையிலான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை டி20 அணியைத் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. அதில், பார்ட்மேன், கோட்சீ, டி காக், பஜோரன், ரீஜா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்கோ ஜான்சன், கிளாசன், கேசவ் மகாராஜ், மில்லர், ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், நோர்க்யா, ரிக்கெல்டன், சம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பைப் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.

News April 30, 2024

புத்தி கெட்டுத் திரிந்தால் தான் புத்தி வரும்

image

இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் என இளைஞர்களுக்கு இயக்குநர் செல்வராகவன் அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்களை வலைத்தளங்களில் அவ்வப்போது பகிரும் அவர் தனது X பக்கத்தில், ‘ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள்! புத்தி கெட்டுத் திரிந்தால்தான் புத்தி வரும்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

News April 30, 2024

பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ பரவியது எப்படி?

image

தேவ கவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களைப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கசிய விட்டது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன் 2000க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது.

News April 30, 2024

ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்

image

நடப்பு ஐபிஎல் ப்ளே-ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர். இதனால், சாம் கரன், பட்லர், சால்ட், பேர்ஸ்டோ, மொய்ன் அலி உள்ளிட்ட வீரர்கள் வெளியேற உள்ளதால் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 30, 2024

பிரஜ்வாலைக் கைது செய்ய பரிந்துரை

image

பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய ஆணையம் மவுனம் காப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தக் கூறிய மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!