India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் பரப்புரையில் அதிமுக காட்டிய சுணக்கம், பாஜகவுக்கு சாதகமாக மாறுமென சிலர் தப்புக் கணக்கு போடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக என்ற வலிமையான கட்சி தேர்தலுக்காக திட்டமிட்டு வேலை செய்யவில்லை. அதிமுகவின் தொய்வு திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும். அதே போல பாஜக வளரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்றார்.

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அகிப் இலியாஸ் தலைமையிலான அணியில், ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

டெல்லி மகளிர் ஆணையத்தில் பணியாற்றிய 233 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அவர்களை நியமித்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் “நம்ம மாஸ்டர்” என்ற பெயரில் நடனம் ஆடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில், அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என பிரபுதேவா வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெப்ப அலை வீசுவது பற்றி கடந்த சில நாள்களாக அடிக்கடி வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது. வெப்ப அலை என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு பகுதியில் நிலவும் இயல்பு வெப்பநிலையை விட கூடுதலாக 3°C நிலையானது, தொடர்ந்து 3 நாளுக்கு மேல் இருந்தால் அதனை வெப்ப அலை என்பர். இதன்படி சமவெளியில் 40°Cக்கு மேல், கடலோரப் பகுதிகளில் 37°Cக்கு மேல் வெப்பம் நிலவினால் அது வெப்ப அலையாகக் கருதப்படும்.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. <

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும் முஸ்லீம்களுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குண்டூரில் பிரசாரம் செய்த அவர், முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும், ஆட்சி அமைத்ததும் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார். மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கூடாது என அக்கட்சியின் கூட்டணியில் உள்ள பாஜக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

CSK வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

மதுபாட்டில் பைபேக் திட்டத்தின் மூலம் ₹306 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபானங்கள் விற்கும்போது, கூடுதலாக பெற்ற ₹10 மூலம் வசூலான ₹306 கோடியில் ₹297 கோடி மதுபிரியர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹9 கோடி தனிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4,829 மதுக்கடைகளில் 4,397இல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிபிஐ கைதுக்கு எதிராக, ஜாமின் கோரி பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 6ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மதுபான முறைகேடு தொடர்பாக கவிதாவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிபிஐ வழக்கில் ஜாமின் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.