News March 20, 2025

மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சி., வேதனை

image

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதிக்கு இந்த படுகொலைகள் தீர்வாகுமா என வினவியுள்ள அவர், ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போரில், காசா மக்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மரணிப்பதுதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

யூடியூப் பார்த்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிங்கப்பெண்!

image

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவது மலையேற்ற வீரர்களின் கனவு. நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கே எவரெஸ்டில் ஏறுவது கடினமான ஒன்று. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வசந்தி(59), யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்த்து எவரெஸ்டின் Base Camp-க்கு சென்று அசத்தியுள்ளார். கணவரை இழந்து தையல் தொழில் செய்துவரும் இவர், அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சாதனை படைத்த வசந்தி நிஜமாகவே சிங்கப் பெண்தான்!

News March 20, 2025

தடையை தகர்த்த ஷகிப் அல் ஹசன்

image

சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக கூறி, வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் துவண்டு போகாத ஷகிப், பல கட்ட முயற்சிக்கு பின் பந்துவீச்சை சரி செய்தார். அதன் தொடர்ச்சியாக 3ஆவது முறை சோதனையில் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

News March 20, 2025

இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

image

மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக அரசு, தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 2025ஆம் ஆண்டு முதல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளிக்கூடத்தில் (சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல்) பயின்றாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News March 20, 2025

“மார்பகங்களை தொட்டாலும் ரேப் முயற்சி இல்லை”

image

பாலத்துக்கு அடியில் சிறுமியை(11) இழுத்துச் சென்ற 2 இளைஞர்கள், அவளின் மார்பகத்தில் கைவைத்து, பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ ரேப் வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மார்பகத்தை தொடுவதும், கீழாடை நாடாவை அறுப்பதும் ரேப்புக்கு தயாராவதாக இருக்கலாம். ஆனால் ரேப் செய்ததாகாது என்றும், வழக்குப்பிரிவை மாற்ற உத்தரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது. உங்க கருத்து?

News March 20, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? அன்புமணி

image

பிஹார், தெலங்கானாவை பின்பற்றி தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனவும், சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

ஆண்குறியை பிளேடால் அறுத்து… கொடூரம்

image

உ.பி.யில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் அருகே வீட்டுக்கு வெளியே ஒன்றரை வயது ஆண்குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பக்கத்துவீட்டுப் பெண், பிளேடால் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு தப்பிவிட்டார். ஆபத்தான நிலையில், தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அந்த பெண் அப்படி செய்ததாக கூறப்படுகிறது.

News March 20, 2025

‘பிங்க் ஆட்டோ’ 2ஆம் கட்ட அறிவிப்பு வெளியீடு!

image

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பெண்கள் வரும் ஏப்.6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து உறுதியானது

image

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், பிரிவதாக முடிவு செய்து விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர். தனஸ்ரீக்கு 4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சாஹல் ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் இன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

News March 20, 2025

செந்தில் பாலாஜி டெல்லி விசிட்.. புகழேந்தி போட்ட குண்டு

image

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என புகழேந்தி மர்மம் உடைத்துள்ளார். செந்தில் பாலாஜி பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகவும், அதனால்தான் அவர் தற்போது வெளியில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இது தெரியாமல் இந்த அரசு இருக்குமானால், அதை அவர்கள்தான் அனுபவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!