News March 20, 2025

கூகுளின் புதிய மொபைல் அறிமுகம்!

image

கூகுள் நிறுவனத்தின் Pixel 9a, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tensor G4 chipset உடன் இந்த மொபைல் போன் வெளியாவதால் முந்தைய தலைமுறை போன்களை விட, செயல்திறனில் அதிக வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8GB RAM 128GB, 256GB சேமிப்பு திறன் கொண்டது. இந்த போனின் ஆரம்ப விலை ₹50,000க்கு ஒரு ரூபாய் குறைவு. அடுத்த மாதம் முதல் ஃபிளப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

News March 20, 2025

வீரப்பன் மகளுக்கு நாதகவில் முக்கிய பதவி!

image

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி NTKவில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் சீட்டு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

News March 20, 2025

BREAKING: இந்திய அணிக்கு ₹58 கோடி பரிசு

image

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு BCCI ₹58 கோடி பரிசை அறிவித்துள்ளது. வீரர்கள், தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. ICC கோப்பைகளை அடுத்தடுத்து வெல்வது அணியினரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக BCCI பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. முன்னதாக, CT கோப்பையை வென்றதற்காக ICC சார்பில் இந்திய அணிக்கு ₹19.53 கோடி பரிசு வழங்கப்பட்டது.

News March 20, 2025

ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் தான் வாங்க முடியும்!

image

வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்து பெற்றுக் கொள்ளலாம். சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு என்றும் 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு SMSல் தகவல் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2025

‘கஜினி’ படம் போல சர்ப்ரைஸ் இருக்கும்: ஏ.ஆர்.முருகதாஸ்

image

சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தில் ‘கஜினி’ படம் போல ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது ஆக்சன் த்ரில்லர் படத்தில், சூர்யா- அசின் காதல் காட்சிகள் சர்ப்ரைஸ் கொடுத்தது மாதிரி, இப்படத்திலும் உள்ளதாகவும், காதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் 30ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

News March 20, 2025

சம்மரில் AC யூஸ் பண்றீங்களா?

image

கோடைகாலம் நெருங்க நெருங்க, வீட்டில் AC பயன்பாடு அதிகரிக்கும். மேலும், இந்த காலங்களில்தான் விபத்துகளும் அதிகரிக்கும். எனவே நீண்ட நாள்களுக்கு பிறகு AC பயன்படுத்துகிறவர்கள், ஒரு முறை சர்வீஸ் செய்துவிட்டு உபயோகிப்பது நல்லது. அதேபோல் கம்ப்ரசர் சூடாக இருக்கிறதா என அடிக்கடி செக் செய்யுங்கள். வாயுக் கசிவு இருக்கிறதா எனவும், டெக்னீசியனிடம் காட்டி உறுதிபடுத்திக் கொள்ளவும்.

News March 20, 2025

விண்வெளியில் விவசாயம் பார்த்த சுனிதா!

image

ISSல் சுனிதா வில்லியம்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? வேற்று கிரகத்தில் பூமியில் உள்ள தாவரங்கள் சிலவற்றை வளர்க்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகளை ஆராய லெட்யூஸ் என்ற கீரையை வளர்க்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தபோது, ஒரு நாளைக்கு 16 முறை என்ற அளவில் 4,592 தடவை சூரிய உதயம், அஸ்தமனம் பார்த்திருக்கிறார்.

News March 20, 2025

ஹமாஸுடன் தொடர்பு.. USAவில் இந்தியர் கைது

image

யூதர்களுக்கு எதிராக பிரசாரம் மற்றும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி இந்தியாவைச் சேர்ந்த பதர் கான் சூரியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது விசா ரத்து செய்யப்பட்டு, விரைவில் நாடு கடத்தப்பட உள்ளார். ஆனால் தனது மனைவி பாலஸ்தீனைச் சேர்ந்தவர் என்பதால், தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக சூரி தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவராக சூரி உள்ளார்.

News March 20, 2025

மஸ்க் ஒரு பைத்தியம்.. பீதியில் டெஸ்லா கார் ஓனர்கள்

image

அமெரிக்க அரசு ஊழியர்களை தொடர்ந்து வேலையை விட்டு நீக்குவதால், <<15811222>>எலான் மஸ்கின்<<>> டெஸ்லா நிறுவன கார்கள் அந்நாட்டில் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து தங்கள் கார் தப்பிக்க உரிமையாளர்கள் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் இணையும் முன்னரே கார் வாங்கிவிட்டதாகவும், ஆனால் கண்டிப்பாக மஸ்க் ஒரு பைத்தியம்தான் எனவும் அவர்கள் தங்கள் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்.

News March 20, 2025

நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

image

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் அடிமைகள் இல்லை, ராஜதந்திரிகள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மாநில முதல்வரால், மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கூட வாங்கித் தர முடியவில்லை எனவும் ஸ்டாலினை சாடியுள்ளார்.

error: Content is protected !!