News March 18, 2025

இதுதான் நாட்டுக்கு தேவை: ராகுல் காந்தி

image

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நாட்டுக்கு தற்போது தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நடத்திக் காட்டுவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

News March 18, 2025

24 தலித்துகள் கொலை.. 3 பேருக்கு மரண தண்டனை

image

உ.பி.யில் 24 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. தெகுலியில் 1981இல் போலீஸ் உடையில் புகுந்த ராதே, சந்தோஷ் சிங் உள்ளிட்ட 17 பேர் கும்பல், தலித்துகளை சுட்டுக் கொன்று, கொள்ளையடித்து சென்றது. வழக்கு காலத்தில் ராதே உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர். ஒருவர் சிக்கவில்லை. எஞ்சிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

நம்பர் சேமிக்காமல் வாட்ஸ்அப் கால் பண்ண முடியுமா?

image

கான்டாக்டில் நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியும். அது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப்பில் CALL பகுதிக்கு சென்று + என்பதை அழுத்த வேண்டும். இதையடுத்து, அங்கு திரையில் வரும் Call a Number என்பதை கிளிக் செய்தால், டயல் பேட் தோன்றும். இப்போது அதில் உங்களுக்கு தேவைப்படும் நம்பரை கொடுத்து டயல் செய்து பேசலாம். நம்பரை சேமிக்க வேண்டியதில்லை.

News March 18, 2025

ஐபிஎல்: அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

image

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என பார்க்கலாம். ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி, 17 சீசன்களிலும் ஒரே அணிக்காக 252 போட்டிகள் விளையாடி 8,004 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 8 சதங்கள், 55 அரைசதங்களும் அடங்கும். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள் ஆகும். மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி அணிகளுக்காக 160 போட்டிகள் சாஹல் விளையாடி 205 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

News March 18, 2025

உயர்ந்த மனிதர் காலமானார்!

image

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.

News March 18, 2025

இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (1/2)

image

1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.

News March 18, 2025

இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

image

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.

News March 18, 2025

சிறுமியை ரேப் செய்து கொன்ற கொடூர தந்தை கைது

image

7 வயது சிறுமிக்கு எமனாக மாறிய கொடூர தந்தை பற்றிய செய்தி இது. உ.பி. காசியாபாத்தில் உணவு ஒவ்வாமையால் சிறுமி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் ரேப் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடுமையை செய்தது சிறுமியின் தந்தை என்பதுதான் கொடூரத்தின் உச்சம். ஹோலி பண்டிகையன்று போதையில் இருந்த அவர், சிறுமியை ரேப் செய்துள்ளார். அப்போது, அவள் அலறியதால் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.

News March 18, 2025

டிராகன் VS NEEK… ஓடிடியிலும் தொடரும் யுத்தம்!

image

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படமும் பிப். 21-ல் திரையரங்குகளில் வெளியாகின. டிராகன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், NEEK படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்நிலையில், மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் டிராகன் படம் வெளியாகும் அதே நாளில் NEEK படம் அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஃபேவரைட் படம் எது?

News March 18, 2025

நிர்வாணமாக நடித்தது ஏன்…. மனம் திறந்த சம்யுக்தா

image

‘சுழல் 2’ வெப்சீரிஸில் நிர்வாண காட்சிகளில் சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. இதுபற்றி கூறியுள்ள அவர், இந்த காட்சிகளில் நடிக்கும் முன், தன் தாயிடம் சொல்லி ஒப்புதல் பெற்றதாகவும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குநர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கட்டாயப் படுத்தவில்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!