News August 15, 2025

சுதந்திர தின உரை: PM மோடி புதிய சாதனை

image

79-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த PM மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மோடியின் மிக நீண்ட சுதந்திர தின உரையாக இது அமைந்தது. தனது முதல் சுதந்திர தின உரையை 2014-ல் 65 நிமிடங்கள் பேசிய அவர், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 98 நிமிடங்கள் பேசியிருந்தார். தற்போது, அதையும் தாண்டி 105 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியுள்ளார். மோடியின் பேச்சில் உங்களை கவர்ந்த அம்சம் எது?

News August 15, 2025

கொடியேற்றத்தில் ஈர்க்கும் இந்த ஜீப்பின் வரலாறு தெரியுமா?

image

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றத்தின் போது, முன்வரிசையில் இருக்கும் இந்த ஜீப்புக்கு தனி சிறப்பு உள்ளது. 1965-ல் பூட்டான் மன்னர் Jigme Dorji Wangchuck, அப்போதைய இந்திய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஜீப்பை பரிசாக அளித்துள்ளார். 2000-ம் ஆண்டில், இந்த ஜீப் அதிகாரப்பூர்வமாக இந்திய ராணுவத்திற்கு மாற்றப்பட்டு நாட்டின் சொத்தாக மாறியது.

News August 15, 2025

தங்கம் விலை மீண்டும் சரிவு.. சவரன் ₹74,240-க்கு விற்பனை

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.15) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,280-க்கும், சவரன் ₹74,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹127-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,27,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று மாற்றமின்றி விற்பனையானது. இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

News August 15, 2025

திமுக வாங்கும், ஆனால் கொடுக்காது: EPS விமர்சனம்

image

திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை என EPS விமர்சித்துள்ளார். குடியாத்தத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மகளிர் உரிமை தொகையை 28 மாதங்களாக திமுக வழங்கவில்லை என்றும், அதிமுகதான் அதனை போராடி பெற்று தந்ததாகவும் கூறினார். தற்போது இது மேலும் 30 லட்சம் பேருக்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் கஷ்டத்துக்காக கொடுக்கவில்லை, தேர்தல் காரணமாக வழங்கப்படுகிறது என்றார்.

News August 15, 2025

டோல்கேட்களில் ஆண்டுக்கு ₹3,000 பாஸ் அமலுக்கு வந்தது

image

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் <>FAStag திட்டம்<<>> இன்று அமலுக்கு வந்தது. *வாகன்(VAHAN) தரவுகளின் மூலம் சரிபார்க்கப்பட்ட வணிக நோக்கமில்லா கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இவை செல்லுபடியாகும். *பாஸ் தொடங்கிய நாளிலிருந்து ஒரு ஆண்டு (அ) 200 டோல் பயணங்கள் செல்லலாம். *TN-ல் 74 டோல்கேட்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. *இந்த பாஸை பெறுவோர் கட்டாயம் முன் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். SHARE IT.

News August 15, 2025

J&K மாநில அந்தஸ்து: மோடி கூறும் மந்திரம்

image

ரத்து செய்யப்பட்ட ஜம்மு & காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீண்டும் கோரிய வழக்கில், பஹல்காம் தாக்குதல் பின்னணியில் அதற்கான சூழலை மத்திய அரசே மதிப்பிடுமாறு நேற்று SC கூறியது. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, ‘ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு’ என்ற மந்திரத்தை ஏற்றபோது பிரிவு 370 என்ற சுவர் இடிக்கப்பட்டது எனக் கூறினார். இது SC அறிவுறுத்தலை மறுப்பது போன்று உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News August 15, 2025

மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

image

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

image

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

News August 15, 2025

இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு இதுதான் காரணம்

image

தனக்கும், தனது அண்ணன் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால் 10 ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பட நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்த காலகட்டத்தில் நுழைந்த வைரமுத்து, இளையராஜா வளர்ந்து வருவதற்கு, தானே காரணம் என பல மேடைகளில் கூறியதாக தெரிவித்தார். இதனை முதலில் நம்பாத ராஜா, பின்னர் ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் வைரமுத்து – இளையராஜா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறினார்.

News August 15, 2025

பாரபட்சம் காட்டும் மத்திய அரசு: ஸ்டாலின் தாக்கு

image

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சியை விட TN அரசின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதியை கூட போராடி வாங்க வேண்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!