India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, கொச்சி போலீசில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் அளித்துள்ளார். தனது இரண்டாவது மனைவியான அம்ருதாவும், மூன்றாவது மனைவியான எலிசபெத்தும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அளிக்க, அவர் தனது நான்காவது மனைவி கோகிலாவுடன் வந்திருந்தார்.
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.
தெலங்கானாவில் BC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருக்கிறது அம்மாநில அரசு. இந்தியாவில் தமிழ்நாடு(69%) தவிர, எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கிடையாது. அதனை முறியடிக்கும் வகையில், மொத்த இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இதனை செய்திருக்கிறார்.
40 வயதைத் தாண்டிய பிறகும், தோனி சிறப்பாக விளையாடுவதற்கு, கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடுதான் காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வயதில் ஐபிஎல்லில் விளையாட ஃபிட்னஸ் வேண்டும் எனவும், அதற்கு தோனி கடுமையாக உழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தினமும் 2-3 மணி நேரம் தோனி பேட்டிங் பிராக்டிஸ் செய்வதாகவும், அதுதான் மற்ற வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காசா, லெபனான், சிரியா பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க மறுத்ததாகக் கூறி இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், தன்னைப் பற்றி கிசுகிசு வந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைவிட, ஒரு இயக்குநர் செய்ததுதான், தன் வாழ்வில் மறக்க முடியாதது என அவர் கூறியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து ₹3.5 கோடி வாங்கி கொடுத்ததாகவும், அதில் ₹1.5 கோடியை இயக்குநர் வைத்துக் கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது.
அவரை (கிலோ) ₹35, வெண்டை ₹35, பீன்ஸ் ₹30, பீட்ரூட் ₹35, பாகற்காய் ₹35, கத்தரிக்காய் ₹55, முட்டைக்கோஸ் ₹30, உருளைக்கிழங்கு ₹40, முருங்கைக்காய் ₹60, கொத்தமல்லி ₹40, புடலங்காய் ₹30, தக்காளி ₹15க்கும், பீர்க்கங்காய் ₹18, சுரைக்காய் ₹15, முள்ளங்கி ₹15, சின்னவெங்காயம் ₹36க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும், கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20% ஆகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. சமையல் எண்ணெய் 33.59%, குளிர்பானங்கள் 1.66% ஆகவும் உயர்ந்துள்ளன.
லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெக பதிலடி கொடுத்துள்ளது. மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், உங்களை மக்கள் கடுகளவும் மதிக்க மாட்டார்கள், கண்டுகொள்ளவும் மாட்டார்கள் . எத்தனை காலம் இது போல் பேசியும், சாட்டையால் அடித்தும் ஏமாற்றுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.