India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

பிஹாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து வளர்ச்சி பணிகளில் புதிய உத்வேகம் பிறந்ததாக, தேர்தல் பரப்புரையில் PM மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் மோசமான ஆட்சி குறித்து இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பேசுவார்கள் என்றும், பாஜகவினர் இளைஞர்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிஹார் தேர்தலில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

▶அக்டோபர் 24, ஐப்பசி 7 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி பெஸ்ட்டா? ஓடுவது பெஸ்ட்டா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். உடலை ஃபிட்டாக பராமரிக்க விரும்புவோர் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 2 கி.மீ தூரம் நடப்பது high BP மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், உடல் எடையை குறைக்க ஓடுவதுதான் பெஸ்ட். இது அதிக கலோரிகளை எரிப்பதுடன், உடல் ஆற்றலையும் மேம்படுத்துகிறது. நீங்க என்ன பண்ணுவீங்க?

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 333 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய தெ.ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 404 ரன்களை குவித்தது. 2-வது இன்னிங்சில் பாக்., 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தெ.ஆப்பிரிக்காவுக்கு 72 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக எட்டிய தெ. ஆப்பிரிக்கா, முறையாக பாக்., மண்ணில் டெஸ்ட் வெற்றியை பெற்று வரலாறும் படைத்துள்ளது.

பிரபல உணவுத் தரவரிசை தளமான TasteAtlas, சமீபத்தில் உலகின் சிறந்த wraps பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் பிரபல உணவுகளில் ஒன்றான கொல்கத்தா கத்தி ரோல், டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. உங்களுக்காக, சிறந்த wraps பட்டியலை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கொல்கத்தா ரோலுக்கு எந்த இடம்? கமெண்ட்ல சொல்லுங்க.

AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்துவருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027-க்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு, பதிலாக ரோபோக்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ‘AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகள் செய்யலாம்’ என X-ல் பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்து?

தென் மாவட்டங்களில் ₹1000 கோடி கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இந்த கனிமவள கொள்ளையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தினால் அது நியாயமாக இருக்காது என்றும் கூறியுள்ளார். எனவே தென்மாவட்டங்களில் நடத்த கனிமவள கொள்ளை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.