India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ₹66,000ஐ தொட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி ₹66,400ஐ தொட்ட தங்கத்தின் விலை, அதன்பின் சற்றே குறைந்து ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இன்று மீண்டும் ₹66,000ஐ தொட்டு, தங்கம் வாங்குவோரை அலற வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர் முதலீட்டாளர்கள்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவரது வருமானம் பெருகிக் கொண்டே செல்கிறது. கடந்த 2024ல் மொத்தமாக ₹350 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், ₹120 கோடி வரியாக செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் வரி கட்டுவதில் ஷாருக்கானையும், சல்மான் கானையும் மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார். திரையுலகினருக்கும் முன்னுதாரணமாய் திகழ்கிறார்.
கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டு எழுந்துள்ளன. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கியவுடன், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 173 புள்ளிகள் உயர்ந்து, 22,682க்கு வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளின் பங்குகள் இன்று நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. பஜாஜ் நிதி நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம், ₹1,000 கோடி டாஸ்மாக் ஊழல், போராட்டம் நடத்திய பாஜக கைது என பல்வேறு விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹66,000க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹8,250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி, கிராமுக்கு ₹113க்கு விற்கப்படுகிறது.
2024ல் அதிக அதிகாரமிக்க நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதுவும் ரஷ்யா, பிரான்ஸ், UKவை ஓரங்கட்டி 0.30 புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கிறது. எப்போதும் போல, 0.89 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 0.80 புள்ளிகளுடன் சீனா 2வது இடத்திலும் நீடிக்கின்றன. பொருளாதாரம், ராணுவம், முதலீட்டு மூலதனத்தை கொண்டு நாடுகளின் பலம் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன்களை, தங்கள் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இக்கடன்கள் தள்ளுபடியல்ல என்றும், அவற்றைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாராக்கடனில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ₹9.27 லட்சம் கோடி ஆகும்.
மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, கொச்சி போலீசில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் அளித்துள்ளார். தனது இரண்டாவது மனைவியான அம்ருதாவும், மூன்றாவது மனைவியான எலிசபெத்தும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அளிக்க, அவர் தனது நான்காவது மனைவி கோகிலாவுடன் வந்திருந்தார்.
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.