India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டிராகன்’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தில், ப்ரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், வெப்பத்தை தணிப்பதற்கான வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. குளிர்பானங்கள் முதல் ஏ.சி, ஏர்கூலர், டியோடரன்டுகள் வரை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் முகத்தில் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, ராஜமாணிக்கம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுகவின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
பங்காளிகளாக பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கி, டிராகன் – யானை நடனத்தை அடைவது மட்டும் தான் சீனா- இந்தியாவிற்கு சரியான தேர்வாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையானதுதான், அதற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
நடிகர் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் வரும் 27 ஆம் தேதி லூசிபர் 2 திரைப்படத்தின் 2ம் பாகமான எம்புரான் வெளியாகிறது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என x பக்கத்தில் பதிவிட்டு மோகன்லால் ரசிகர்களை பிரித்விராஜ் குஷிபடுத்தியுள்ளார். மேலும் படத்தின் ட்ரெய்லரை முதல் ஆளாக பார்த்து ரஜினி பாராட்டியதை என்றும் மறக்கமாட்டேன் என்ற மற்றொரு தகவலையும் பதிவிட்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் குழு பூமிக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்பேஸ்X டிராகன் விண்கலத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் காட்சியை நாசா நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. விண்கலம் தரையிறங்க 4 நிலைகளை கடக்க வேண்டும். 4 நிலைகளை கடந்து விண்கலம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போல ஃபுளோரிடா கடற்கரையில் கேப்சூல் மூலம் வீரர்கள் இறங்குவார்கள்.
இலங்கையின் முதல் சூப்பர் மாடலும், நடிகையுமான அகுஷ்லா செல்லையா (67) காலமானார். ‘ஸ்லேவ் ஆஃப் தி கன்னிபல் காட்’, ‘டார்சன் தி ஏப் மேன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து சர்வதேச அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
AUS, NZக்கு எதிராக தொடர் தோல்வி, WTC ஃபைனலுக்கு தகுதி பெறாதது என டெஸ்ட்டில் IND அணி சொதப்பி வருவதற்கு ரோஹித் பொறுப்பேற்க கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரோஹித் போன்ற ஒரு வீரரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நகைக் கடனுக்கான RBIயின் புதிய விதிகளின் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதேபோல், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து, அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார். எனினும், இந்த ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்களவை சபாநாயகர் ஏற்பாரா என்பது தெரியவில்லை.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, BC பிரிவினர் 56.36% இருப்பதாகக் கூறி, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. பீகாரும், ஆந்திராவும் கூட மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசு தானாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.