India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக தலைமையுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் செங்கோட்டையனை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இன்று காலை EPS தலைமையில் நடைபெற்ற அதிமுக MLAக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்கமணி, SP வேலுமணி, KP முனுசாமி ஆகியோர் செங்கோட்டையனை தனிமையில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமாதானம் ஆவாரா செங்கோட்டையன்?
தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழா தொடங்க உள்ளதால், கோழி, சேவல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள், கிராம மக்கள் ஆடு, கோழி, சேவலை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், 1kg எடைகொண்ட சேவல் ₹350க்கு விற்ற நிலையில், தற்போது ₹450 – ₹500 வரையும், 1kg எடைகொண்ட நாட்டுக்கோழி விலை ₹450 இல் இருந்து ₹1500 வரையும் விற்பனையாகிறது. ஆடு (ஒன்றுக்கு) ₹3000 வரை உயர்ந்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் குறித்து பாஜக எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீல் அறுவறுப்பாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடலில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் தங்கத்தை பதுக்கி கடத்தினார் என அவர் அறுவறுப்பாக பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய மாநில அமைச்சர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
EPSஐ தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன், இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அப்போது, கடம்பூர் ராஜூவுடன் அவர் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், மற்ற தலைவர்களையும் தன் வசம் இழுக்கிறார் என்று பேச்சு அடிபடும் வேளையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. என்னதான் நடக்கிறது அதிமுக கூடாரத்தில்!
சென்னையில் வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 17) காலை வர்த்தகப்படி கிராம் ஒன்றுக்கு ₹1 உயர்ந்து ₹113க்கு விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். இதனால், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,13,000க்கு விற்பனையாகிறது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ₹105க்கு விற்பனையான நிலையில், 17 நாள்களில் கிராமுக்கு 8 ரூபாயும், கிலோவுக்கு ₹8,000 ரூபாயும் உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி, அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ரெடியாக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, மறைந்த மருத்துவர் செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,210க்கும், சவரன் ₹65,680க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் வாரத்தின் முதல் நாளிலேயே விலை சற்று சரிவைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிந்து வரும் சூழலில், அதற்கு இன்ஃபோசிஸின் முன்னாள் CFO மோகன்தாஸ் பாய் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பணியாற்ற கூடுதல் மொழி அறிவு நிச்சயம் பயன்படும் என அவர் கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கை இந்தியர்களின் பணித்திறனுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.