News March 14, 2025

ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு

image

மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பாதுகாப்பு அம்சங்கள் மிக்கவை என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபோன்களையும், ஐபேடுகளையும் வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. சைபர் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதை செய்யுமாறு அது அறிவுறுத்தியுள்ளது.

News March 14, 2025

டேய் நகருடா டேய்.. அள்ளு விடும் ‘கூலி’ போட்டோஸ்

image

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் மாஸ் கெட்டப், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அதேபோல், இப்படத்தில் நடிக்கும் அமீர்கானுக்கும் இன்று பிறந்தநாள் என்பதால், அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோவை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

News March 14, 2025

லக்‌ஷயா சென் தோல்வி… காலிறுதியுடன் முடிந்த பயணம்!

image

இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறி இருந்தார் இந்திய இளம் நட்சத்திரம் லக்‌ஷயா சென். காலிறுதியில் சீன வீரர் லி ஷி ஃபெங்கை எதிர்கொண்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 10-21 என்ற கணக்கில் முதல் செட்டையும், 16- 21 என்ற கணக்கில் அடுத்த செட்டையும் பறிகொடுத்து லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார். இதன்மூலம், தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

News March 14, 2025

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன்: காந்தி பேரன்

image

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன், சொன்ன கருத்துக்களையும் திரும்ப பெற மாட்டேன் என காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். RSS- பாஜக உள்நாட்டு எதிரிகள், துரோகிகள், ஆபத்தானவர்கள் என துஷார் விமர்சித்து இருந்தார். மேலும், அவர்களை எதிர்ப்பது விடுதலை போராட்டத்தை விட முக்கியமானது என கூறியிருந்தார். இந்த கருத்துகளுக்காக துஷாரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தியிருந்தது.

News March 14, 2025

540 கோடி VIEWS… ஹாட்ஸ்டாரில் சாம்பியன்ஸ் டிராபி சூப்பர் ஹிட்

image

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை உலகம் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மொத்தம் 540 கோடி பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக, பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதிய போட்டியை 124.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 60.2 கோடி, இந்தியா, ஆஸி. போட்டியை 66.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்திய விளையாட்டுப் போட்டிகள் லைவில் இதுவொரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

News March 14, 2025

மனைவியிடம் சில்மிஷம்: கணவன் தந்த தண்டனை

image

உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?

News March 14, 2025

பிரபல மலையாள எழுத்தாளர் கே.கே. கொச்சு மறைந்தார்

image

பிரபல மலையாள எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கே.கே. கொச்சு காலமானார். நீண்ட நாட்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். கே.கே. கொச்சு, கேரள சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். நெருக்கடி நிலையின்போது 16 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் எழுதிய தலித்தியன், கேரளா ஸ்டோரி, டிஸ்டன்ஸ் ஆப் புத்தா உள்ளிட்ட புத்தகங்கள் முக்கியமானவை ஆகும்.

News March 14, 2025

காணாமல் போனவரை கண்டுபிடித்த சோஷியல் மீடியா

image

பிஹாரைச் சேர்ந்த தேவி, கடந்த பிப்.23ல் தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கும்பமேளா கூட்டநெரிசலில் தொலைந்து போனவர், அங்கிருந்து ரயில் ஏறி ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சோனி தேவி தங்க இடம் கொடுத்து பராமரித்துள்ளார். அவரை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, தேவியின் மகன் தன் தாயைக் கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார்.

News March 14, 2025

நடிகையிடம் ₹2.27 லட்சம் அபேஸ்

image

திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.

News March 14, 2025

வில்லத்தனத்தில் வெறித்தனம் காட்டும் ரவி மோகன்

image

‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வேகமாக பரவிய நிலையில், அது தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமாக வில்லத்தனம் காட்டுவதாகவும், நிச்சயம் சம்பவம் உறுதி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இலங்கையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது SK கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!