News March 13, 2025

அடித்து ஆடும் இந்திய மாஸ்டர்ஸ் அணி

image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AUSM அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய INDM அணி, AUSM பவுலர்கள் வீசும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விடுகின்றனர். சச்சின் 39* (25), யுவராஜ் 19* (10) களத்தில் உள்ளனர். INDM அணி தற்போது வரை 9 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது.

News March 13, 2025

செவ்வாய் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

image

செவ்வாய் பகவான் கடந்த பிப்.24-ம் தேதி மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதனால் பின்வரும் 3 ராசிகள் நற்பலன்கள் பெறுவார்கள்: *மேஷம்: குடும்பத்தில் குழப்பங்கள் தீரும், பணியில் முன்னேற்றம், மனப் பிரச்னைகள் தீரும் *கடகம்: சிக்கல்கள் குறையும், திருமண யோகம், புதிய வீடு, வாகன வாய்ப்பு, தன்னம்பிக்கை, தைரியம் கூடும் *சிம்மம்: நிதி ரீதியான முன்னேற்றத்தால் கடன்சுமை குறையும், வெளிநாட்டு பயண வாய்ப்பு.

News March 13, 2025

மது பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் விலை: ED

image

<<15749508>>டாஸ்மாக்<<>> போக்குவரத்து ஒப்பந்தத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், மதுபாட்டிலுக்கு 10 – 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ED தெரிவித்துள்ளது. பெரும் லாபத்திற்காக போலி கணக்குகளை செலவில் காட்டி மோசடி நடத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ED, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

News March 13, 2025

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மார்க் வுட்

image

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர பவுலரான மார்க் வுட், காயம் காரணமாக தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கால் மூட்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால், 4 மாதம் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. இவரை ரூ.7.5 கோடி தொகைக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக புதிய வீரரை தேடும் நிலைக்கு லக்னோ தள்ளப்பட்டுள்ளது.

News March 13, 2025

10 பேர் ஒருத்தியை திருமணம்… துரைமுருகன் சர்ச்சை பேச்சு

image

மும்மொழிக் கொள்கை விவகாரம் பற்றி எரிந்துவரும் நிலையில், அமைச்சர் துரைமுருகனின் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ‘ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் நாகரிகம். வடக்கே அப்படியல்ல. 5 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது’ என்று பேசியிருக்கிறார்.

News March 13, 2025

பள்ளிகள் திறப்பு எப்போது?

image

தமிழக பள்ளிகளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 41 நாள்களும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 38 நாள்களும் விடுமுறை கிடைக்கும்.

News March 13, 2025

ஷேர் மார்க்கெட்டுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

NSE, BSE உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை (மார்ச் 14) ஹோலி பண்டிகை, அடுத்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் என்பதால் 3 நாட்கள் மார்க்கெட் செயல்படாது. புரோக்கிங் நிறுவனங்களும் இந்நாட்களில் வங்கி பரிவர்த்தனை மற்றும் டிரேடிங் செயல்பாடுகளை மேற்கொள்ளாது. வரும் திங்களன்று (மார்ச் 17), ஷேர் மார்க்கெட்கள் வழக்கம்போல செயல்படும்.

News March 13, 2025

டாஸ்மாக் ரெய்டு… முழு விசாரணை தேவை – பாஜக

image

<<15749508>>டாஸ்மாக்<<>> அலுவலகம், மது ஆலைகளில் நடத்திய சோதனை தொடர்பாக விளக்கமளித்த அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், டாஸ்மாக்கில் மதுபாட்டில், பார், போக்குவரத்து என அனைத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 13, 2025

WPL: குஜராத் மகளிர் அணி பந்துவீச்சு

image

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில் இன்று மும்பை-குஜராத் அணிகள் மோதுகின்றன. பிராபோர்ன் மைதானத்தில் டாஸ் வென்ற GGW அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி, மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ளும். இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 13, 2025

XXX சோப் நிறுவனர் காலமானார்

image

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.

error: Content is protected !!