India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி. நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் நேஹா, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூக இளைஞரை மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துள்ளார். மறுநாளே நேஹாவை நைசாக பேசி அவரது தந்தை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை, தன் மகனுடன் சேர்ந்து தந்தை கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மகளின் உயிரைவிட கௌரவம் பெரியதா என்ன?
தமிழக பட்ஜெட் லோகோவில் ரூபாயின் சின்னமான ‘₹’-க்கு பதில் ‘ரூ’ என்று மாற்றப்பட்டு இருப்பது பேசுபொருளாகி உள்ளது. தமிழர் வடிவமைத்த சின்னத்தை திமுக மாற்றியுள்ளதாக <<15746737>>அண்ணாமலை<<>> குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில், தமிழ் உணர்வினை தமிழ்நாடு அரசு வெளிப்படுத்தி இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமீர் கான், தன்னுடைய 25 ஆண்டுகால தோழி கௌரி ஸ்ப்ராட்டை டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 1986ஆம் ஆண்டு திருமணம் செய்த முதல் மனைவி ரீனாவை 2002ஆம் ஆண்டு அமீர் விவாகரத்து செய்தார். பின்னர், 2005ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பரை திருமணம் செய்து 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தற்போது, ஓராண்டு காலமாக கௌரியை டேட் செய்வதாக தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக ED தெரிவித்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் ஊழல் தமிழ்நாட்டை உலுக்கி இருப்பதாக தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சாராய ஆலைகள் சம்பாதிக்கவே டாஸ்மாக் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மார்ச் 17-ல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் இருக்கும் தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவுத் தூக்கத்தை தவிர்த்தால், அது பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரகங்களில் சேதமடைந்திருக்கும் திசுக்களை இரவில் தான் உடல் பழுதுபார்த்து சரி செய்கிறது. ஆகவே, இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக, உள்ளுறுப்புகள் தங்கள் பழுதுகள், கழிவுகள் நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை விழித்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 38 டாலர்கள் உயர்ந்து, 2,978 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இந்த விலையை மையப்படுத்தியே இந்திய சந்தைகளில் தங்க நகைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றி உலக இசைப் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தார். சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றி சாதனை படைத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணம், அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பங்கேற்புடன் விழா நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், ஆஸி., மாஸ்டர்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய மாஸ்டர்ஸ் அணி. ராய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய INDM அணி, 20 ஓவர்களில் 220/7 ரன்கள் குவித்தது. சச்சின் 42, யுவராஜ் 59, பின்னி 36, யூசுப் பதான் 23 ரன்கள் எடுத்தனர். AUSM தரப்பில் சேவியர், டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும், அரசு ஹாஸ்பிடல்களில் தீவிர சிகிச்சைகளுக்கு தாமதம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களிடம் மருத்துவ காப்பீடு இல்லாமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே ஆதரவற்றவர்களாக இருக்கும் அவர்கள், அரசு ஹாஸ்பிடலுக்கு வரும்போது அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டிகளில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், இதில் SC – 788, ST – 472, OBC – 1,521 பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 7,825 ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம்கள் மூலம் நிரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.