India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம் உடலின் மிக ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும் கழிவுநீக்கமும். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும், போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடலாம். குறிப்பாக, உடலின் கழிவுநீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்கும் சிறுநீரகங்களை சரியாக பராமரிக்கவில்லை எனில், அதற்கு நாம் கொடுக்கும் விலை கடுமையானதாக இருக்கும். ஆகவே, அலட்சியத்தை கைவிட்டு ஆரோக்கியம் பேணுங்கள்.
தவெகவின் ஆறாம் கட்ட நிர்வாகிகள் பட்டியலை தலைவர் விஜய் X தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், 19 கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 25 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட இருந்த நிலையில், 6 மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்தார். நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு 13 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமாகி பான் இந்தியாவுக்கும் பிரபலமான இவர், தமிழில் ‘தலைவி’ படத்தில் கூட அண்மையில் நடித்திருந்தார். இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை. தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தமிழக அரசு வாங்கும் கடன் மாநில வளர்ச்சிக்காக எப்படி செலவிடப்படுகிறது என்பதை மக்கள் அறியவே பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடும்.
IT மற்றும் ITES ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் மீதமுள்ள 18 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை வருகிறது. 15-16 ஆம் தேதிகள் வார இறுதி நாட்களும் என்பதால், தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை. அதேபோல், மார்ச் 22, 23 மற்றும் 29 ஆம் தேதி வார இறுதி, 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை + உகாதி மற்றும் 31 ஆம் தேதி ரம்ஜான் என மொத்தம் 7 நாட்கள் லீவ் வருகிறது. எனவே, இப்போதே ஜாலியான பயணம் மேற்கொள்ள திட்டமிடுங்கள்.
கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கொடைக்கானலில் வார நாட்களில் நாளொன்றுக்கு 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 6,000 வாகனங்களும் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். அதேபோல், ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 வாகனங்களும் வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இது ஜூன் வரை அமலில் இருக்கும்.
தமிழக பட்ஜெட் நாளை தாக்கலாகவிருக்கும் நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கார், தோல், காலணி மற்றும் ஜவுளித்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்குமான பொது விநியோகத்திட்டம் நமது மாநிலத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டம் பற்றி ஒரு தவறான தகவல் பரவி வருவதாக மத்திய அரசின் PIB Fact Check பிரிவு எச்சரித்துள்ளது. ரூ.2,100 முன்பணம் கட்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், ரூ.5 லட்சம் கடன் கொடுப்பதாக ஒரு போலி லோன் அப்ரூவல் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரீ-பைனான்சிங் ஏஜென்சி மூலம், முத்ரா கடன்கள் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என PIB விளக்கம் அளித்துள்ளது.
உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில், இங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் 220 அழிந்துவிட்டதாக Central Institute of Indian Languages கூறுகிறது. மேலும், 197 மொழிகள் அழிந்து வருவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இத்தனை மொழிகள் வேகமாக அழிவதற்கு ஹிந்தியின் ஆதிக்கமே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியாவின் முதல் 150CC ஹைப்ரிட் பைக்கை யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருக்கும் SMG மோட்டர், இஞ்சினுடன் இணைந்து செயல்பட்டு மைலேஜை அதிகப்படுத்தும். மேலும், சிக்னல்களில் தானாக இஞ்சினை ஆஃப் செய்யும் சிஸ்டம் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. Yamaha FZ-S Fi Hybrid என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், ₹1,44,800க்கு அறிமுகம் ஆகியிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.