News March 13, 2025

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில், 1 – 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.9 – 24ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு <<15738675>>அட்டவணையும்<<>> வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கோடை விடுமுறை குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. அதன்படி, 1 – 5ஆம் வகுப்புக்கு ஏப்.22ல் இருந்தும், 6 – 9 ஆம் வகுப்புக்கு ஏப்.25ல் இருந்தும் விடுமுறை தொடங்குகிறது.

News March 13, 2025

பிரதீப் ரங்கநாதனின் படத்தில் 3 நடிகைகள்?

image

‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவருடன் அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ஷர்மாவும் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News March 13, 2025

மகளிருக்கு மாதம் ₹2,500 கொடுப்போம்: அண்ணாமலை

image

தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் மகளிருக்கு மாதம் ₹2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும், அதற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் எனவும், கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

News March 13, 2025

போஸ்ட் ஆபிஸ் ATMகளால் அவதி

image

அவதியடைந்துள்ளனர். போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாக எந்த ATM-ம் செயல்படவில்லை. மாற்று ATMகளில் பணம் எடுத்தால், பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மக்கள் புகாரளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பணம் நிரப்பும் ஏஜென்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணம் நிரப்பவில்லை என்றனர்.

News March 13, 2025

தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

image

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 13, 2025

4 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: IMD வார்னிங்

image

தமிழகத்தில் இன்று அடுத்த 4 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

News March 13, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் – விவேகானந்தர்.

News March 13, 2025

இயக்குநராகும் நடிகர் ரவிமோகன்

image

தனுஷை தொடர்ந்து, நடிகர் ரவிமோகனும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் பணியை தொடங்க உள்ளார். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் இயக்க உள்ளாராம். இதனை யோகி பாபுவே உறுதிப்படுத்தியுள்ளார். இப்படி, நடிகர்கள் எல்லாம் இயக்குநர் அவதாரம் எடுத்தால், நாங்க எங்க போறது என இயக்குநர்கள் குமுறுகின்றனர்.

News March 13, 2025

WPL: வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி

image

WPL 2025ல் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இத்தொடரில் இதுவரை குஜராத் அணிக்கு எதிராக MI தோல்வியடைந்தது இல்லை. அதனால், இன்றைய போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். மறுபுறம், டெல்லி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இறுதிப் போட்டி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

News March 13, 2025

Manicure பண்றீங்களா? உஷார்..!

image

Manicure எனப்படும் கைவிரல் நக ஒப்பனையை தொடர்ந்து செய்து வந்த பெண்ணின் விரல்களில், தோல் கேன்சருக்கான செல்கள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரல்களில் கோடு போன்று திடீரென உருவானதை கவனித்த அப்பெண், டாக்டரை அணுகியுள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ‘0 melanoma’ என்ற தொடக்க நிலை தோல் புற்றுநோய்க்கான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Manicure பண்ற உங்க தோழிகளுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!