News June 12, 2024

ஜூலையில் சசிகலா சுற்றுப்பயணம்?

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததையடுத்து மீண்டும் கட்சி மீது சசிகலா தன் பார்வையை திருப்பியுள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்ட கையோடு, சில நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அவரின் அழைப்பிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, தொண்டர்களை நேரில் சந்திக்கும் நோக்கில், ஜூலையில் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

News June 12, 2024

2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்றால் என்ன? என்ன வித்தியாசம்?

image

2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி செல்ஃபோன் சேவை குறித்து அடிக்கடி கேள்விப்படுவோம். அப்படி என்றால் என்ன? ஜி என்ற எழுத்து தமிழில் தலைமுறை என பொருள்படும் Generation என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள முதல் எழுத்தாகும். அந்த G எழுத்தை சேர்த்து, செல்ஃபோன் இணையதள வேகத்திற்கேற்ப, அலைவரிசை தரம் பிரிக்கப்பட்டுள்ளது. 2ஜி சேவை 384 கேபிபிஎஸ் வரையிலும், 3ஜி 3 எம்பிபிஎஸ், 4ஜி 1 ஜிபிபிஎஸ், 5ஜி 20 ஜிபிபிஎஸ் வரை வேகம் இருக்கும்.

News June 12, 2024

வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் எங்கு தெரியுமா?

image

நடிகர் சரத்குமாரின் மூத்த மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கும், நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அவர்களது திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தாய்லாந்தில் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், உறவினர்களை சொந்த செலவில் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News June 12, 2024

40/40 வெற்றியால் என்ன லாபம்?

image

தமிழ்நாட்டில் 40க்கு 40 வெற்றி பெற்று என்ன பயன் என கேட்டவர்களுக்கு, இந்த வெற்றிதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என கூறி வந்த கட்சிகளின் உண்மை நிலையை மக்கள் உணர்த்தியுள்ளதாகவும், கோவையில் ஜூன் 15இல் நடைபெறும் முப்பெரும் விழா, திமுக தொண்டர்களின் உழைப்பை பாராட்டும் விழா எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

News June 12, 2024

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்

image

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்தார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, தாம் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். மக்களவை எம்பியாக மட்டும் தொடர அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.

News June 12, 2024

கேரளாவில் பாஜக கால் பதித்ததற்கு யார் காரணம்?

image

கேரளாவின் திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம், அங்கு முதன்முதலாக பாஜக காலூன்றி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு சரிவு தான் காரணம் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கேரளாவில் பாஜக எப்படி ஒரு இடத்தை வென்றது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News June 12, 2024

சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளை வெல்ல வேண்டும்

image

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை வென்றது போல், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 200+ தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குகளின் அடிப்படையில் 221 சட்டமன்றத் தொகுதிகளில் INDIA கூட்டணி முன்னிலை வகித்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இடைத் தேர்தலை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News June 12, 2024

பறவைக் காய்ச்சல் எவ்வாறு பரவும்? எப்படி தவிர்ப்பது?(1/3)

image

கொரோனா ஆபத்து முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் மூலம் அந்த காய்ச்சல் பரவும். அது H5N1, H7N9 என்று 2 வகைபடுத்தப்பட்டுள்ளது. வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் புரதத்தை வைத்து இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது. பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவுவது அரிதினும் அரிதாகும்.

News June 12, 2024

பறவைக் காய்ச்சல் எவ்வாறு பரவும்? எப்படி தவிர்ப்பது?(2/3)

image

பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த கோழி, வாத்து போன்றவற்றின் இறைச்சியை சரிவர சமைக்காமல் சாப்பிட்டாலோ, அதன் உடல்கள், கழிவுகளை மிதித்தாலோ தொட்டாலோ மனிதருக்கு வைரஸ் பரவும். முதலில் மேல் சுவாசக் குழாய், நுரையீரலை பாதிக்கும். பிறகு மூளை, மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதனால் காய்ச்சல், சோர்வு, இருமல், தசை வலி, தொண்டை வலி, வாந்தி, மூக்கில் நீர் வடிதல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை ஏற்படும்.

News June 12, 2024

பறவைக் காய்ச்சல் எவ்வாறு பரவும்? எப்படி தவிர்ப்பது?(3/3)

image

கோழிப்பண்ணைகளில் பணியாற்றுவோர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்போருக்கே பறவைக் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. கோழிப் பண்ணைகளில் பணியாற்றுவோர் எனில், கையுரை, முகக்கவசம் அணிந்து பணியாற்றலாம். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். காலணிகளை பராமரிக்க வேண்டும். பண்ணை அருகிலுள்ள பகுதிகளில் வசிப்போர், அக்கழிவுகள் வீட்டருகில் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

error: Content is protected !!