News March 13, 2025

பள்ளிகள் திறப்பு எப்போது?

image

தமிழக பள்ளிகளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 41 நாள்களும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 38 நாள்களும் விடுமுறை கிடைக்கும்.

News March 13, 2025

ஷேர் மார்க்கெட்டுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

NSE, BSE உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை (மார்ச் 14) ஹோலி பண்டிகை, அடுத்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் என்பதால் 3 நாட்கள் மார்க்கெட் செயல்படாது. புரோக்கிங் நிறுவனங்களும் இந்நாட்களில் வங்கி பரிவர்த்தனை மற்றும் டிரேடிங் செயல்பாடுகளை மேற்கொள்ளாது. வரும் திங்களன்று (மார்ச் 17), ஷேர் மார்க்கெட்கள் வழக்கம்போல செயல்படும்.

News March 13, 2025

டாஸ்மாக் ரெய்டு… முழு விசாரணை தேவை – பாஜக

image

<<15749508>>டாஸ்மாக்<<>> அலுவலகம், மது ஆலைகளில் நடத்திய சோதனை தொடர்பாக விளக்கமளித்த அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், டாஸ்மாக்கில் மதுபாட்டில், பார், போக்குவரத்து என அனைத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 13, 2025

WPL: குஜராத் மகளிர் அணி பந்துவீச்சு

image

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில் இன்று மும்பை-குஜராத் அணிகள் மோதுகின்றன. பிராபோர்ன் மைதானத்தில் டாஸ் வென்ற GGW அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி, மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ளும். இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 13, 2025

XXX சோப் நிறுவனர் காலமானார்

image

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.

News March 13, 2025

திமுகவில் முறைவாசல் செய்பவர் ரகுபதி – ஜெயக்குமார்

image

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டிய இபிஎஸ், தன்னுடன் விவாதிக்க முதல்வருக்கு திராணி இருக்கிறதா என வினவி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இபிஎஸ் உடன் ஒரே மேடையில் விவாதிக்க தான் தயார் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், ‘திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் ரகுபதி, அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என காட்டமாக கூறியுள்ளார்.

News March 13, 2025

WARNING: மக்களே, இத மட்டும் செய்யாதீங்க

image

இந்தப் பழக்கங்கள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும்: *இரவு நீண்டநேரம் தூங்காமல் இருத்தல் *அதிகம் காபி அருந்துதல் *அடிக்கடி தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல் *மது அருந்துதல் *துரித & பாக்கெட் உணவுகள் எடுத்தல் *விட்டமின் B6, மக்னீசியம் குறைபாடு *உணவில் அதிகம் சர்க்கரை, உப்பு சேர்த்தல் *சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அடக்குதல் *போதுமான தண்ணீர் அருந்தாமல் இருத்தல். SHARE IT.

News March 13, 2025

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: ED

image

TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

News March 13, 2025

ஒரே நாளில் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்…!

image

2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 தமிழ் படங்கள் நாளை வெளியாக இருக்கிறது. ஸ்வீட் ஹார்ட், பெருசு, வருணன், ராபர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், மாடன் கொடை விழா, குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதேபோல், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, ரஜினி முருகன் ஆகிய படங்களும் ரி-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. புதிய படங்கள் வெளியாக இருப்பது சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்…!

News March 13, 2025

ஹோலி: ஒவ்வொரு கலருக்கும் காரணம் இருக்கு தெரியுமா?

image

வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதில், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகம் அடைவார்கள். அதில், சிவப்பு நிறம் அன்பு, வலிமை, புதிய தொடக்கத்தை குறிக்கிறது. இயற்கை, செழிப்பை குறிப்பது பச்சை நிறமாகும். மஞ்சள் வண்ணம் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை காட்டுகிறது. இப்படியாக ஒவ்வொரு வண்ணம் பூசுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம்.

error: Content is protected !!