News March 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 14, 2025

பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணம்: நிர்மலா சீதாராமன்

image

மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக சாடிய அவர், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது உள்ளதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 14, 2025

நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

image

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவில் வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப்போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இது போன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.

News March 14, 2025

ராசி பலன்கள் (14.03.2025)

image

➤மேஷம் – உற்சாகம் ➤ரிஷபம் – போட்டி ➤மிதுனம் – சாந்தம் ➤கடகம் – ஓய்வு ➤ சிம்மம் – ஆதாயம் ➤கன்னி – நட்பு ➤துலாம் – நஷ்டம் ➤விருச்சிகம் – செலவு ➤தனுசு – கவலை ➤மகரம் – பெருமை ➤கும்பம் – பகை ➤மீனம் – பயம்.

News March 14, 2025

ஆணவக்கொலை: மகளை தீர்த்துக்கட்டிய கொடூர தந்தை

image

உ.பி. நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் நேஹா, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூக இளைஞரை மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துள்ளார். மறுநாளே நேஹாவை நைசாக பேசி அவரது தந்தை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை, தன் மகனுடன் சேர்ந்து தந்தை கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மகளின் உயிரைவிட கௌரவம் பெரியதா என்ன?

News March 14, 2025

வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ’ பிடிக்காது: செல்வப்பெருந்தகை

image

தமிழக பட்ஜெட் லோகோவில் ரூபாயின் சின்னமான ‘₹’-க்கு பதில் ‘ரூ’ என்று மாற்றப்பட்டு இருப்பது பேசுபொருளாகி உள்ளது. தமிழர் வடிவமைத்த சின்னத்தை திமுக மாற்றியுள்ளதாக <<15746737>>அண்ணாமலை<<>> குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில், தமிழ் உணர்வினை தமிழ்நாடு அரசு வெளிப்படுத்தி இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 14, 2025

60 வயது நடிகரின் காதல்

image

பாலிவுட் நடிகர் அமீர் கான், தன்னுடைய 25 ஆண்டுகால தோழி கௌரி ஸ்ப்ராட்டை டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 1986ஆம் ஆண்டு திருமணம் செய்த முதல் மனைவி ரீனாவை 2002ஆம் ஆண்டு அமீர் விவாகரத்து செய்தார். பின்னர், 2005ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பரை திருமணம் செய்து 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தற்போது, ஓராண்டு காலமாக கௌரியை டேட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

டாஸ்மாக் முறைகேடு: போராட்டம் அறிவித்த பாஜக

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக ED தெரிவித்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் ஊழல் தமிழ்நாட்டை உலுக்கி இருப்பதாக தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சாராய ஆலைகள் சம்பாதிக்கவே டாஸ்மாக் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மார்ச் 17-ல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் இருக்கும் தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

தூக்கம் தவிர்த்தால், சிறுநீரகம் பாதிக்கும்

image

இரவுத் தூக்கத்தை தவிர்த்தால், அது பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரகங்களில் சேதமடைந்திருக்கும் திசுக்களை இரவில் தான் உடல் பழுதுபார்த்து சரி செய்கிறது. ஆகவே, இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக, உள்ளுறுப்புகள் தங்கள் பழுதுகள், கழிவுகள் நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை விழித்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

News March 13, 2025

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 38 டாலர்கள் உயர்ந்து, 2,978 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இந்த விலையை மையப்படுத்தியே இந்திய சந்தைகளில் தங்க நகைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!