India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. மம்மூட்டி நடித்த ‘டொமினிக் & தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை தொடர்ந்து புதிய கதை ஒன்றை, ஜெயமோகனுடன் இணைந்து கெளதம் எழுதி வருகிறார். அண்மையில் கார்த்தியை நேரில் சந்தித்த கெளதம், கதையை சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது. கெளதம், கார்த்தி காம்போ எப்படி இருக்கும்?
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 206 ▶குறள்: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். ▶பொருள்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 அரையிறுதி ஆட்டத்தில் IND அணி AUSயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, யுவராஜ் (59), சச்சின் (42) உதவியுடன் 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய AUS அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் நதீம்(4), வினய்(2), பதான்(2) ஆகியோர் வீக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் IND இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
TNல் மகப்பேறு இறப்பு, சிசு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2020-21ம் ஆண்டில் 1 லட்சம் மகப்பேறுகள் நடந்தால், அதில் 73% என்ற அளவிலிருந்த இறப்பு விகிதம், 2024-25ல் 39% ஆக குறைந்துள்ளது. 2020-21ல் 1,000 குழந்தைகள் பிறந்தால் 9.7% என்ற நிலையிலிருந்த சிசு இறப்பு விகிதம், தற்போது 7.7% ஆகக் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
▶மார்ச்- 14 ▶மாசி – 30 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 05:00 PM – 06:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 AM ▶எமகண்டம்: 03:00 AM – 04:30 AM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶நட்சத்திரம் : பூரம்.
ஜெர்மனியின் ரோஸ்டோக் நகரம் நிர்வாண கடற்கரைகளுக்கு உலகப் புகழ்பெற்றது. இங்குள்ள நிர்வாண பீச்களுக்கு ஆடையணிந்து வரும் பார்வையாளர்களால் தொந்தரவு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இங்கு ஆடை அணிந்து வருபவர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாண பீச்களுக்கு தற்போது மவுசு குறைந்துள்ளதால், அவற்றின் எண்ணிக்கையும் 37-லிருந்து 27 ஆகக் குறைந்துள்ளதாம்.
தினமும் காலை எழுந்து கொள்ளும் போதே சிலர் கழுத்து வலியுடன் எழுவார்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணை முக்கிய காரணம். தலையணை சரியாக இல்லையெனில், கழுத்து, தோள்பட்டை வலி, உடல் சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து, தூக்கமின்மை பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது. இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை வரும். மெல்லிய, சுத்தமான தலையணையே பயன்படுத்துங்கள்.
WPLல் குஜராத்துக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் MI வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த MI, மேத்யூஸ் (77), ஸ்கிவர் பிரண்ட் (77) ஆகியோரின் உதவியுடன் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய GG அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, 19.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 15ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.