News March 14, 2025

இன்று பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

image

இன்றைய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம், பழைய பென்சன் திட்டம், EL பணமாக்குதல் போன்ற அறிவிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன?

News March 14, 2025

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 – ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 4,88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 சிறைக்கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. http://www.dge.tn.gov.in-ல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்கவும்.

News March 14, 2025

இங்கு இன்று விடுமுறை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 14 ஆம் தேதி) ஒசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலின் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, இம்மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

ஷேர் மார்க்கெட்டுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

NSE, BSE உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளுக்கு இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இன்று (மார்ச் 14) ஹோலி பண்டிகை, அடுத்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் என்பதால் 3 நாட்கள் மார்க்கெட் செயல்படாது. புரோக்கிங் நிறுவனங்களும் இந்நாட்களில் வங்கி பரிவர்த்தனை மற்றும் டிரேடிங் செயல்பாடுகளை மேற்கொள்ளாது. வரும் திங்களன்று (மார்ச் 17), ஷேர் மார்க்கெட்கள் வழக்கம்போல செயல்படும்.

News March 14, 2025

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது

image

TN அரசின் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு, தேர்தலையொட்டி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் ஆகும் என்பதால், ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அதனால், ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 14, 2025

சாம்பியன்ஸ் டிராபி.. RECORD VIEWS

image

JioHotstarல் ஒளிபரப்பப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 540 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. IND vs NZ இறுதிப்போட்டி மட்டும் 124.2 கோடி பார்வைகளை பெற்று, அதிகம் பேர் நேரலையில் பார்த்த கிரிக்கெட் போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன், ஹாட்ஸ்டாரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் இந்த போட்டியின் போது பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

News March 14, 2025

இன்று முதல் ஆரோக்யா பால் லிட்டருக்கு ₹4 உயர்வு

image

ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ₹4ம், தயிர் விலை ₹3ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76ல் இருந்து ₹80ஆகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், பால், மோர் பாக்கெட் அளவுகளில் 125 ML, 120 ML ஆகவும், 180 ML, 160 ML ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

News March 14, 2025

சுங்கச்சாவடிகள் மூடப்படாது: மத்திய அமைச்சர்

image

சுங்கச்சாவடிகள் நிரந்தரமானவை, அவை மூடப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். போட்ட முதலீடுகள் திரும்ப கிடைத்ததும், சுங்கச்சாவடிகள் மூடப்படுமா என மாநிலங்களவையில் திமுக MP வில்சன் கேள்வி எழுப்பினார். இதற்கு, தனியார் உதவியுடன் அமைக்கப்படும் சாலைகளில் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கலாம். பின் அரசு நேரடியாக வசூலிக்கும் என கட்கரி பதிலளித்தார்.

News March 14, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.

News March 14, 2025

மருந்து தட்டுப்பாடு கூடாது; அமைச்சர் உத்தரவு

image

முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்களில் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துமாறும், கேட்கும் மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!