India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, கல்வி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு அரசு செயல்படுவதாக பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் எனக் கூறிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளின் பெருமையை உலகறியும் வகையில் 193 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். குறிப்பாக டெல்லி, மும்பை பெங்களூரு, கொல்கத்தாவில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்த ₹2 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
புஷ்பாவின் 2 பாகங்களும் அல்லு அர்ஜுனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றன. இதனால் அவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அவர் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அட்லியின் படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
TN சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ₹1,000 கோடி மதுபான ஊழல் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதிமுகவினரின் பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் அறிவித்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து அதிமுகவினர் முழக்கமிட்டதால் அமளி நிலவியது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் நாயக், கடந்த 2018இல் சென்னை சாலவாயலில் தங்கி பணிபுரிந்தார். அப்போது, தனது மனைவியின் தங்கையான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட், ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையோடு ₹1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் – ₹40, தக்காளி ₹15, பீன்ஸ் – ₹25, பீட்ரூட் – ₹10, முள்ளங்கி – ₹12, குடைமிளகாய் – ₹15க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் கடந்த சில நாள்களாக கிலோ ₹40 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கை ₹70ஆகவும், கொத்தமல்லி ஒரு கிலோ ₹200ஆகவும் விலை உயர்ந்துள்ளது. உங்கள் ஊரில் காய்கறி விலை என்ன?
TN சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தனிநபர் வருமானத்தில் தமிழகம் முத்திரை பதிப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே சமயம், TN கடன் ₹9 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதால் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா ₹3 லட்சம் வரை கடன் சுமை உள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. எனவே, பட்ஜெட்டில் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் மொத்த GDPயில் TN பங்கு 9.21% என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ₹9 லட்சம் கோடி கடன் சுமையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது. இதனை சமாளிக்க சில நலத்திட்டங்களை அரசு கைவிடப் போகிறதா? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. 15வது நிதி கமிஷன் அறிக்கையின்படி கடன் சுமை கட்டுக்குள்ளேயே இருப்பதாக தங்கம் தென்னரசு பதில் அளித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2 ஆவது முறையாக அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால், சலுகைகள், புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேலத்தில் பணியின்போது தண்ணீர் தொட்டியின் மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சுப்ரமணி (55) என்பவரது குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து சுப்ரமணியின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.