India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிகள் மேம்பாட்டுக்கு ₹1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் புதிய வகுப்பறை, அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்காக இந்த நிதி செலவிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கும் புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்காக புதுமைப்பெண் திட்டத்துக்கு ₹420 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பணிபுரியும் <<15755163>>பெண்கள்<<>> வசதிக்காக ₹87 கோடியில் மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பெண்களின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட விடியல் பயணம் திட்டத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் சராசரியாக ₹888 மிச்சமாவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தீர்வு காணும் வகையில், பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை அருகே 2,000 ஏக்கரில் ஒருங்கிணைந்த புதிய ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் சர்வதேச தரத்தில் அனைத்துக் கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNல் 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு ₹37,000 கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் ₹875 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
₹675 கோடி மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ₹400 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். கிராமச் சாலைகளை மேம்பாட்டுக்காக ₹2,200 கோடியும், சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ₹2,423 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வரும் குப்பை தேக்கம் பிரச்னைக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சேகரிக்கப்படும் பல லட்சம் டன் திடக்கழிவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பிரமாண்ட ஆலை, தாம்பரம் அருகே அமைக்கப்படவுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ₹1000 பெற்று வருவதாகவும், நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு ₹13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை என 8 மாவட்டங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ₹2 கோடி, 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் பதிப்பிட ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ₹880 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் வரலாறு காணாத வகையில் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.