News March 14, 2025

3 மாநகராட்சிகளுக்கு 1,125 மின்சாரப் பேருந்துகள்

image

போக்குவரத்துக்குத் துறைக்கு ₹12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை- 905, கோவை- 75, மதுரை – 100 என மொத்தம் 1,125 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும். 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறிய அவர், கிண்டியில் ₹50 கோடியில் பன்முக போக்குவரத்து முனையமும் அமைக்கப்படும் என்றார்.

News March 14, 2025

BREAKING: இவர்களுக்கு மாதம் ₹2,000

image

பெற்றோரை இழந்த சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ₹500ஆக உயர்த்தப்படும் என்றும், 10 மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு (ஒவ்வொரு ஊழியருக்கும்) ₹2,000 ஊதிய மானியத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

9 இடங்களில் சிப்காட்.. 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

image

சிட்கோ மூலம் 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சை – நடுவூர், திருச்சி – சூரியூர், நெல்லை – நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் – தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-கள் அமையவுள்ளன.

News March 14, 2025

மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா!

image

மதுரை, கடலூர் மாவட்டங்களில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களை அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் மதுரை, கடலூர் மாவட்ட மக்கள் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையத்துக்கு ₹ 1 கோடி!

image

நீலகிரி, கோவை, நெல்லை, மதுரை, பள்ளிக்கரணையில் காணப்படும் வேட்டைப் பறவைகளை பாதுகாக்க, ₹ 1 கோடி நிதியில் ஆய்வு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் வேட்டைப் பறவைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் தீட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க தனுஷ்கோடியை புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

மின்சார ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம்: தங்கம் தென்னரசு

image

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க, தலா ₹20,000 மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ₹2.5 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும், கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ₹74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

அனைத்து சிறுமிகளுக்கும் புற்றுநோய் தடுப்பூசி!

image

பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் மிக அபாயகரமானதாக கருப்பைவாய் புற்றுநோய் கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை செலுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 14, 2025

சென்னை குடிநீருக்காக புதிய நீர்த்தேக்கம்!

image

சென்னை அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 6 ஆவது நீர்த்தேக்கமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். மாமல்லபுரம், செங்கல்பட்டு இடையே ₹360 கோடியில் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படும் என்றும், உபரி வெள்ளநீர் இதில் சேமிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 14, 2025

விடியல் பயணத் திட்டத்தால் இவ்வளவு சேமிப்பா?

image

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை உறுதி செய்து வரும் ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40% முதல் 60% வரை உயர்ந்துள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தால் பெண்கள் மாதம் ரூ.888 சேமிக்க முடிவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

8 மாவட்டங்களில் புதிய அரசுக் கலைக் கல்லூரிகள்

image

சென்னை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழங்குடி மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அரசு யுனிவர்சிட்டிகளுக்கு ₹700 கோடியும், அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையத்திற்கு ₹50 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!